Wednesday, January 30, 2013

புதுவலசையில் SDPI கொள்கை விளக்க கருத்தரங்கம்-திரளாக மக்கள் பங்கேற்பு

புதுவலசை: நமதூரில் SDPI-யின் கொள்கை விளக்க கருத்தரங்கம் மஹ்பூப் அலி அவர்களது கடையின் மேல்மாடியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், மாவட்ட செயளாலர் ஷரீப் சேட், அழகை நாசர், மாவட்ட செய்தி தொடர்பாளர் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  சகோதரர் செய்யது அஹமது கான் தலைமை தாங்கினார்.

இமாம் நூருல் ஹஸன் பாகவி "அரசியலும் மார்க்கமும்" என்ற தலைப்பில் அறிமுகவுரை நிகழ்த்தினார். அவ்வுரையில் முஸ்லிம்கள் அரசியலை சாக்கடை என்று கூறி ஒதுங்கியதன் விளைவு இன்று அடக்கி ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்ட மக்களாக மாற்றப்பட்டனர். இந்த நிலையை மாற்றி அமைக்க முயலும் சூழலைத்தான் SDPI இந்திய தேசம் முழுக்க செய்துவருகின்றது என்று அழகிய முறையில் அன்றைய சூழலையும், இன்றைய அரசியலையும் எடுத்து கூறினார்.


SDPI-யின் கொள்கைகளை பற்றிய விரிவானவுரையை மாநில பேச்சாளர் அப்துல் ஜமீல் அவர்கள் நிகழ்த்தினார். கட்சியின் ஒழுங்கு முறைகள், நோக்கம் மற்றும் இன்றைய அரசியலின் நிலை பற்றி அன்றாட நிகழ்வுகளையும், அரசியல் கட்சிகளின் நிலைகளையும் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்.

முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் சகோதரர் பைசல் உரை நிகழ்த்தினார். தனது உரையில் இன்று முஸ்லிம்கள் அடையாளம், பாரபட்சம், பாதுகாப்பு என்ற மூன்று விஷயங்களின் அடிப்படையில் பாதிப்புக்குள்ளாக்கபடுகின்றனர். அதன் எதிரொலி தான் விஷ்வரூபம் போன்ற திரைபடங்களின் வருகை. முஸ்லிம்கள் சற்று கவனம் இழந்தாலும் இழப்புகள் ஏராளம் என்று கூறினார்.

இந்நிகழ்சிக்கு நமதூரை சேர்ந்த ஜமாத்தார்கள், சங்கத்தார்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என திரளாக மக்கள் கலந்து கொண்டனர்,. சகோதரர் ரியாஸ் அஹமது நன்றி கூற கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

செய்தி: சகோதரர் ரிஸ்வான்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza