எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருட்களின் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களின் கைகளில் கொடுத்துள்ளது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் டீசல்,பெட்ரோல் ஆகியவற்றின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.இப்படி அடிக்கடி விலைவாசி உயர்ந்தால் நாட்டு மக்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.மக்கள் நலனை விட எண்ணெய் நிறுவனங்களை பற்றி மத்திய அரசு அதிகம் கவலைப்படுகிறது.அதனால் எண்ணெய் நிருவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபத்தில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் நஷ்டத்தை சந்திக்கவில்லை. இந்நிலையில் மத்திய அரசு மக்கள் மீது அக்கறையில்லாமல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 7.50 உயர்த்தியுள்ளது.இந்த விலை உயர்வு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.இல்லையெனில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட தவற மாட்டார்கள்.இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள் தேவைப்படும் சூழலில், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை 9 என்பது போதுமானதல்ல. எனவே மத்திய அரசு சமையல் எரிவாயு உருளைகளை 9 லிருந்து 12 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் .
0 கருத்துரைகள்:
Post a Comment