Monday, January 28, 2013

கருத்து சுதந்திரமா?கருத்து திணிப்பா அல்லது கருத்து பரவலாக்கமா?




கருத்து சுதந்திரம் பறிக்கபடுகிறது என்று கூக்குரலிடும் ஊடகங்கள் ஆனால் கருத்தை திணிப்பதை பற்றியோ அல்லது கருத்தை தவறாக பரவாலாக்க படுகிறது பற்றியோ பேசுவது இல்லையே,உங்களுக்கு எதிராக ஒரு கருத்து சுதந்திரம் நடந்தால் கொந்தளிக்கும் நீங்கள் (தினமலர் புவனேஸ்வரி விஷயம்).உங்களுக்கு நடந்தால் அது கருத்து திணிப்பு! அதே எங்களுக்கு நடந்தால் கருத்து சுதந்திராமா?மேலும் இது வரை சினிமா துறையில் பல படங்களுக்கு பிரச்சினை வந்த பொழுது எதற்கும் வாய் திறக்காத  சினிமா துறை இப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து திணிப்பு நடக்கும் பொழுது நாங்கள் போராடினால் அது கலாச்சார தீவிரவாதமா?இது தான் இரட்டை நீதியோ?

DAM 999 - திரைப்படம் தமிழகத்தில் போராட்டத்தின் காரணமாக தடை செய்யப்பட்ட போது எதிர்த்து கருத்து எழுதாத அல்லது விமர்சனம் செய்யாத கூட்டம் ,

குஸ்பு சர்சையில் சிக்கியபோது அவளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை எதிர்த்து கருத்து எழுதாத அல்லது விமர்சனம் செய்யாத கூட்டம் ,

தங்கர் பச்சன் திரையுலக பெண்களின் கற்பு பற்றி பேசியபோது சினிமா நடிகைகளின் போராட்டத்தை எதிர்த்து கருத்து எழுதாத அல்லது விமர்சனம் செய்யாத கூட்டம் ,
குஜராத் கலவரத்தை மைய்யபடுத்தி எடுக்கப்பட்ட பர்ஸானியா என்ற திரைப்படம் குஜராத்தில் வெளிவிடாமல் (மேலும்இந்த படம் உண்மை சம்பவம், குஜராத்தில் RSS கார்கள் தடுத்தனர்) தடை செய்யப்பட்ட போது எதிர்த்து கருத்து எழுதாத திரை உலகம் அல்லது விமர்சனம் செய்யாத கூட்டம்,

கமலுக்கு எதிராக விருமாண்டி படத்தில் கிருஷ்ணாசாமி கருத்து சொன்ன பொழுது அதை எதிர்க்காத திரையுலம்,




ரஜினி படத்திற்கு ராமதாஸ் எதிர்த்த பொழுது அதை எதிர்க்காத திரையுலம்(ரஜினி நடித்த பாபா  ரஜினி சினிமாவுக்கு  எதிராக குரல் கொடுத்தவர் ராமதாஸ் இன்று கருத்து சுதந்திரம் பற்றி தான் பேசலாமா.... அய்யா ராமதாஸ் அவர்களே  சிறிது பழைய நிகழ்வுகளை சிந்தித்து பார்த்தால் நன்றாக இருக்கு).

ரஜினியின் பாபா படத்தில் ஒரு பாடலின் வரிகள் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது. விஜய் நடித்த கீதை என்ற படத்தின் பெயர் எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது. கமல் நடித்த சண்டியர் படத்தின்பெயர் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது, இதற்கெல்லாம் வாய் திறக்காத திரை உலகம்


இது போக படங்களுக்கு பிரச்சினை வந்த பொழுது வாய் திறக்காத இந்த ஊடகங்கள் ...

இன்னும் கரநாடக தமிழகத்திற்கு துரோகம் செய்து தண்ணீர் விட மறுத்து போது எதிர்த்து கருத்து எழுதாத அல்லது விமர்சனம் செய்யாத கூட்டம்

ஒரு தினமலர் செய்திதாளில் நடிகைகளை பற்றி செய்தி வந்தவுடன்
எழுத்து சுதந்திரம் என்று அமைதியாக இருக்க வில்லையே இந்த திரைவுலகம் எங்களை இழிவு படுத்திவிட்டது இந்த தினமலர் பத்திரிக்கை என்று பிரமாண்ட போராட்டம் நடத்த உங்களை ஊக்குவவித்தது எது? 

ஹிந்து கடவுள்களை ஓவியர் ஹுசைன் அசிங்கப் படுத்திவிட்டார் என்று கூறி அவரை நாட்டை விட்டே துரத்திய போது எதிர்த்து கருத்து எழுதாத அல்லது விமர்சனம் செய்யாத கூட்டம் ,



இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் கொலைகள் கற்பழிப்புகள் நிகழ்திய போது எதிர்த்து கருத்து எழுதாத அல்லது விமர்சனம் செய்யாத கூட்டம்(பெயருக்கு ஒரு கண்டன பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் )
 மேலும் பல அரசியல் கட்சிகள்,ஜாதிகள் கட்சிகள் பல சினிமா படத்தை எதிர்த்த பொழுது அதை பற்றி வாய் திறக்காத திரையுலகம் .

இதுவரை வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் முஸ்லிம்களை பொய்யாக தீவிரவாதியாக காண்பித்த பொழுது(இப்பொழுது உண்மை வெளிவந்து கொண்டு இருக்கிறது இதுவரை நடந்த எல்லா குண்டு வெடிப்புகளுக்கு மூல காரணம்  RSS தீவிரவாதிகள்தான் காரணம்)பொறுமையாக இருந்த முஸ்லிம் சமுகம் எப்பொழுது போல் இல்லாமல் இந்த படத்திற்கு பொங்கி வருவதற்கு காரணம் தற்பொழுது கமலிடம் ஏற்பட்ட மாற்றம் தான்




 கமலிடம் தற்பொழுது ஏற்பட்ட மாறுதல்கள் :

மாறுதல்(1) ஹேராம் திரைப்படம்: இந்த படத்தில் முஸ்லிம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதால் தான் இந்து தீவிரவாதியாக மாற நேர்ந்ததாக ஒரு கருத்தை சொல்வார். இது உண்மைக்கு எதிரான திரிபுவாதம் இந்தியாவில் நடந்த கலவரங்களில் இந்து பெண்கள் முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்ததாக வழக்குகள் இல்லை. அதேநேரம் முஸ்லிம் பெண்கள் ஆர்.எஸ்.எஸ். பேன்ற ஹிந்துத்துவா இயக்கங்களால் கூட்டமாக கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. 

மாறுதல்(2): உன்னைப்போல் ஒருவன்: கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டு வைத்ததாக சொல்லியிருப்பார். இந்த மிகபெரிய வரலாற்று புரட்டை கமலஹாசன் அறியாமல் செய்திருப்பார் என்று சொல்ல முடியவில்லை.


மாறுதல்(3) விஸ்வரூபம்: இந்த படத்தில் முஸ்லிமாக நடிக்கும் கமலஹாசன் தன் மனைவியை வெளி நாட்டினருக்கு கூட்டி கொடுப்பார். அல்குரானை தீவிரவாதத்தை போதிக்கும் நுலாகவும், தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும், கோவை, மதுரை போன்ற நகரங்கள் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடம் போல சித்தரித்துள்ளார்.
இதுவரை முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்தவர் இப்பொழுது அவர்கள் பொண்டாட்டியை கூட்டி கொடுக்கும் அளவுக்கு ஒழுக்கம் கெட்டவர்கள் ஆகவும், அவர்கள் புனிதமாக மதிக்கும் வேத நூல் குரானை அசிங்கப்படுத்தியும், இனி முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்வதை மாற்று மதத்தினர் தவறாக பார்க்கும் அளவுக்கு படத்தை எடுத்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார்.

மேலும் சில காட்சிகள் 

1.கமலஹாசன் ஒரு சாதுவாக இருந்துகொண்டு திடீர் என்று வீரனாக மாறும் நேரம் .. ரப்பனா ஆதின பி துணிய ஹசனதன் வபில் அகிரதி ஹசநாதன் வகினா அதாபன்னார் ..துஆ முழுவதும் ஓதி பின்பு அடிக்க ஆரம்பிக்கிறார் ..

2) தவ்பீக் , சலீம் ,என்ற பெயரில் கமல் வலம் வருகிறார் 

3). தொழுகை நடத்தும் காட்சிகள் நிறைய உள்ளன .

4) கொலை செய்யும் போது .. லாஇலாஹ இல்லல்ஹ் பேனர் காட்டப்படுகிறது .
5). எல்லோரும் போன் பேசி வைக்கும் போது அல்லாஹு அக்பர் என்ற வாசகம் பல முறை சொல்கிறார்கள் .

6)இளம் ஜிஹாதி என்று சிறுவர்கள் காட்டப்படுகின்றனர் .

7) துப்பாக்கி குண்டுகள் தொப்பி விற்பனை செய்யும் கடையில் விற்கப்படுகிறது .

8) பீ சபீலில்லஹ் ..இறைப்பாதை என்ற வாசகம் வருகிறது .

9) முஸ்லிம்களாக வேடமிட்டவர்கள் அபின் பரிசளிப்பது போன்று காட்டப்படுகிறது .

10) கோவை மதுரை நகரங்களில் தலைமறைவாக இருந்தேன் என்று வாசகம் வருகிறது .

11) வக்க்துன் லிதகப இல ஜன்னாஹ் .....நீங்கள் சொர்க்கம் செல்ல நேரம் வந்து விட்டது .என்று அரபியில் சொல்வது .

12) மரணதண்டனை வழங்கும் போது முழு குரான் உடைய ஆயத்தும் ஓதப்படுகிறது .

13 ) இஸ்லாமிய சிறுவர்கள் ஜிஹாதிகளாக உருவாக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார் ..

14) புர்க்காஹ் அணிந்து பெண் வேடமிட்டு தற்கொலை தாக்குதல் நடத்துவதாக ஒரு காட்சி ..



 இதனால் இதுவரை அமைதியாக இருந்த இஸ்லாமியர்கள் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்து , ஜனநாயக ரீதியில் கமல் படத்துக்கு எதிர்ப்பை காட்டினார்கள் . இத்தனை நாள் சும்மா இருந்தவர்கள் வீறு கொண்டு எழுவதை பலரால் தாங்கி கொள்ள முடியவில்லை.இப்பொழுது எனக்கு நீர் பறவை சினிமாதான் ஞாபகத்துக்கு வருகிறது முஸ்லிம்கள் சிறியதாக போராடினால் தீவிரவாதம் ஆனால்  நீங்கள் பெரிய அளவில் போராடினால் அது போராட்டம்  


மேலும்   திரை உலகதினரிடம் ஒரு கேள்வி  முஸ்லிம்கள் இந்த திரைபடத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்கின்றனர் முஸ்லிம்கள் சினிமா பார்ப்பது குறைவுதான் இருந்தாலும் முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவர் கள்தான் முஸ்லிம்களை தீவிரவாதியாக நினைப்பதருக்கு முக்கிய காரணம் சினிமாதான் நீங்கள் காண்பிக்கும் ஒவ்வரு காட்சியும் சிறு குழந்தைகள் உள்பட எல்லாருடைய மனதிலும் மிகவும் ஆழமாக சென்று பதிந்து விடுகிறது மேலும் ஒரு முஸ்லிம் தொப்பி வைத்து கொண்டு,தாடி வைத்து கொண்டு சென்றால் அவனை தீவிரவாதி என்று சிறு குழந்தைகள் கூறுகின்றனர் மூலகாரணம் ஊடகம்.நீங்கள் எங்களை பற்றி நல்ல விதமாக கூட படம் எடுக்க வேண்டாம் தயவு செய்து எங்களை கொச்சைபடுத்தாதிர்கள் (உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்ய வேண்டாம்) 

விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யப்பட்டது என்ற செய்தி வந்தவுடனேயே ஏதோ தமிழகம் மிகப்பெரிய அழிவை சந்தித்ததை போல முஸ்லிகளுக்கு எதிரான மோசமான கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.அது இந்த சம்பவத்தில் மட்டுமில்லை மாறாக முஸ்லிகள் இட ஒதுக்கீடு,தங்களின் உரிமைக்காக ,அரசின் அடக்குமுறையை எதிர்த்து,அப்பாவி முஸ்லிம் கைதிகளின் விடுதலை கோரி என அனைத்து சம்பவங்களிலும் இதை போன்ற கருத்துக்களை தான் எழுதுகிறீர்கள் .கருத்து எழுதுகின்றவர்களில் மதச்சார்பற்ற வாதிகள் என்று தன்னை தானே கூறிக்கொள்ளுபவர்களும் அடக்கம்.உண்மையில் உங்கள் நோக்கம் ஜனநாயகம் அல்லது பேச்சுரிமை என்று இருக்குமேயானால் ஏன் மேற்கூறிய சம்பவங்களில் மவுனமாக அல்லது ஒன்றுமே தெரியாதவர்கள் போல அமைதியாக இருந்தீர்களே ஏன்.இதிலிருந்தே உங்கள் நோக்கம் படத்தை பற்றிய கவலை இல்லை மாறாக முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்தினால் முஸ்லிகளின் கோரிக்கை நியாயம் இருந்தும் கூடஎதிர்கிறீர்கள் என்று தெளிவாகவே தெரிகிறது.


முஸ்லிம்களாகிய நாங்கள் ஒன்றும் அந்நிய நாட்டில் இருந்து வந்த வந்தேறிகள் இல்லை.நாங்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் தான்.இந்த சுதந்திரதிக்கு போராடி பல உயிர்களை தியாகம் செய்தவர்கள்
மீடியாக்கள் மற்றும் திரைப்படங்கள் எதில் சாதித்ததோ இல்லையோ முஸ்லிம்களை பற்றிய பொய்களை பாசிஸ்டுகள் பரப்பிய அதே பொய்யை பரப்புவதில் வெற்றி பெற்றுவிட்டன என்றே நான் கருதுகிறேன்.இந்த பொய்கள் மீண்டும் மீண்டும் பரவக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான் நாங்கள் இந்த படத்தை எதிர்கிறோமே ஒழிய வருடத்திற்கு 100 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது அனைத்து படங்களையும் எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தவில்லை.எங்களின் சுய உரிமைக்காக எங்களை பற்றிய பொய்யை எதிர்த்து தான் போராடுகிறோம் .அதற்க்கு கூட எங்களுக்கு உரிமை கிடையாதா ?அது தவறு என்று கருதுகிறீர்களா ?நீங்கள் எங்களின் உறவுக்கு மதிப்பு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.எங்களை மீண்டும் மீண்டும் காயப்படுத்தாதீர்கள்.

 சென்சார் 
ஒரு படம் சென்சாரில் அனுமதி பெற்ற பிறகு அதை எதிர்ப்பது தவறு. சென்சார் உறுப்பினர்கள் பலவற்றையும் யோசித்துதான் ஓகே சொல்வார்கள் அதன் பின் எதிர்ப்பது தவறு. இது கருத்து சுதந்திரக்கு எதிரானது என்று கூறுகிறார்கள் நாங்கள் கேட்கின்றோம் இது கருத்து சுதந்திரமாம இல்லை கருத்து திணிப்பா?மேலும் சென்சார் உருப்படியாக இருந்தால் இதுவரைக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த படமும் வெளிவந்து இருக்காது காரணம் சென்சாரில் ஊழல் கரை புரண்டு ஓடுகிறது.


சென்சார் போர்டு சான்றிதழ் வாங்கிய பிறகு தடை செய்ய என்ன அதிகாரம் உள்ளது. சென்சார் போர்டு இன்று தனது கடமையை சரியாக செய்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது. இதன் மூலம் சென்சார் போர்டு மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பது தெரிய வருகிறது. சென்சார் போர்டு சான்றிதழ் வாங்கியும் மாநில அரசாங்கம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இப்படத்தை திரையிட சட்டப் படி தடை செய்வதற்கு CINIMATOGRAPH ACT 1952– ல் இடம் இருப்பதை மேதாவிகளுக்கு தெரிவிக்கிறேன்.

நன்றி :
-வழக்கறிஞர் ராஜா முஹம்மது 
அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் பிரதிநிதி

எங்கள் மதத்தை சார்ந்தவனை வில்லனாக காட்டகூடாது என எல்லாமதத்தினரும் கேட்க ஆரம்பித்தால் , எப்படி படம் எடுப்பது.....ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவனை வில்லனாக காட்டுவது தவறல்ல. ஆனால் குறிப்பிட்ட மதம்தான் வன்முறைக்கு காரணம் என காட்டுவது தவறு.
  
அர்ஜூன், விஜயகாந்த்,மணிரத்னம்  படங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு உண்டாக்கியிருக்கிறார். இப்படி படம் எடுத்தது மட்டும் இல்லாமல் இதற்க்கெல்லாம் தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று வேறு கூறியிருக்கிறார். 

இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கு 2010 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னணியில் இருந்த ஹிந்துத்துவாவினர் கைது செய்யப்பட்டதும், ஹிந்துத்துவாவினர் காடுகளில் பயிற்சி எடுத்த தீவிரவாத முகாம்களை தேசிய புலனாய்வு துறையினர் தேடிவருவதும் கமலுக்கு தெரியாதா? இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் ,பாரதிய ஜனதா கட்சி என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டி உள்ள இந்நிலையில் கமலஹாசனின் இந்த முஸ்லிம் விரோத திரைப்படம் அவற்றை மறைக்க அல்லது நியாப்படுத்த உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது.

இதுவரை திரை உலகில் எதிராக பல கருத்துகள் வந்தபோது கருத்து சொல்லத திரையுலகம் இப்பொழுது வரிந்து கொண்டு வருவது ஏன்? 


 விஸ்வரூபம் படத்தை தடை செய்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
முன்னதாக விஸ்வரூபத்திக்கு எதிராக ஓட்டபடட்ட சுவரொட்டி 


source: popularfront nellai

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza