Monday, December 31, 2012

கோவையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் நீதிக்கான ஆர்ப்பாட்டம்


கோவை : கடந்த 2006ஜுலை 22ல் கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு புனைந்து கோவை மாநகரையே குலுங்க வைத்த முன்னால் உளவுத்துரை AC ரத்தின சபாபதியின் மாபாதகச்செயலை யாரும் மறந்திருக்க முடியாது .

ஒன்றுபட்ட முஸ்லிம்களின் போராட்டத்தாலும் , சமூக நலனில் அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் எழுப்பிய குரலாலும் தமிழக அரசு இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வுக்கு (SIT) .மாற்றியது . ஒரு வருட காலமாக இவ்வழக்கை விசாரித்த SIT கடந்த 2007 அக்டோபர் மாதம் கோவை ஜே.எம் - 7 நீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை .சமர்ப்பித்தது இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் காவல்துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழக்கில் , சேர்க்கப்பட்டவை மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன . எனவே இவ்வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கிறோம் என அவ்வறிக்கையில் SIT குறிப்பிட்டுள்ளது .


SIT யால் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் தமிழக அரசு AC ரத்தின சபாபதி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா 2008ம் ஆண்டு இரத்தினசபாபதியை பணிநீக்கம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் சுவரொட்டி ஒட்டியது அதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு கையெழுத்து இயக்கம் நடத்தியது . மேலும் இரத்தினசபாபதியின் நாடகத்தை புத்தகமாகவும் வெளியிட்டது .

இந்நிலையில் தமிழக ரத்தினசபாபதிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை குழு உறுப்பினர் பதவியை வழங்கியுள்ளது . இது முஸ்லிம் மற்றும் சமூக நல ஆர்வலர்களிடத்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . ஏற்கனவே குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட கோவை மாநகரை , பொறுப்பு வாய்ந்த பதவியிலிருக்கும் ஒரு உளவுத்துறை அதிகாரியான AC ரத்தினசபாபதியே வெடிகுண்டு பொய் வழக்கால் கடும் பீதி வயப்படுத்தியுள்ளார் . கோவை மாநகர் மட்டுமல்ல அன்று ஒட்டுமொத்த தமிழகமும் இந்த வெடிகுண்டு பீதியின் பாதிப்பை உணர்ந்தது . பொது அமைதியையும் சட்ட ஒழுங்கையும் சீர்குலைத்து வெடிகுண்டு கபட நாடகத்தால் மக்களை பீதி வயப்படுத்தியுள்ளார்.

இந்த AC ரத்தினசபாபதியை நீதியின் முன் நிறுத்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து 6 ஆண்டுகளாக போராடி வருகிறது . ரத்தினசபாபதிக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை குழு உறுப்பினர் பதவியை ரத்து செய்து  CBCID சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் , ரத்தினசபாபதி மற்றும் துணை புரிந்த காவல் துறை அதிகரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நீதியின் முன் நிறுத்த தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் நீதிக்கான ஆர்ப்பாட்டம் 28.12.2012 அன்று மாலை 4.45 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பில் வைத்து நடைபெற்றது .

இந்த ஆர்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் இப்ராஹிம் பாதுஷா தலைமை தாங்கினார் . மாநில பொது செயளாலர் A . காலித் முஹ்ம்மத் கண்டன உரை நிகழ்த்தினார் . மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் நன்றியுரையாற்றினார் . . இதில் இரத்தின சபாபதியைக் கண்டித்தும் தமிழக அரசை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன . இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர் .

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza