பிலிப்பீன்ஸின் தென்பகுதியில் ஏற்பட்ட பவர்ஃபுல் சூறாவளியால், 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என அறித்துள்ளனர் பிலிப்பீன்ஸ் அதிகாரிகள். கொம்போஸ்டெலா மாகாணத்தில் இதுவரை கண்டிராத அளவில் மோசமான சூறாவளி தாக்கியதில், நகரங்கள் வெள்ளக்காடாக உள்ளன. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன.
பிலிப்பீன்ஸ் அரசு செய்தித் தொடர்பாளர் ஃபி மேஸ்ட்ரே, “உயிரிழந்தவர்களில் ராணுவத்தினரும் அடங்குவர். கொம்போஸ்டெலா மாகாணத்தில் இருந்த ஒன்றில் இருந்த ராணுவ முகாம் ஒன்றும் சூறாவளியால் தாக்கப்பட்டதில் அவர்கள் உயிரிழந்தனர்” என்று இன்று (புதன் கிழமை) தெரிவித்துள்ளார். இறப்பு எண்ணிக்கை பற்றிய முழுமையாக தகவல்கள் இன்னமும் சரியாக கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ராணுவ முகாம் அமைந்திருந்த நியூ பாட்டான் பகுதியில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளர் என குறிப்பிட்ட அவர், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், ‘காணாமல் போனோர்’ பட்டியலில் இணைக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் முறிந்து விழுந்த காரணத்தாலேயே அநேக மரணங்கள் ஏற்பட்டன
0 கருத்துரைகள்:
Post a Comment