வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில், தமது அதிகாரிகளை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது சி.பி.ஐ.! முதல் கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணிபுரிய, சி.பி.ஐ. அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங், “2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் உட்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு சி.பி.ஐ. விசாரணைகளில், குற்றங்கள் வெளிநாடுகளிலும் நடந்துள்ளன. அவற்றை விசாரணை செய்வதற்கு, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நியமிக்கப்படுவது அவசியமாகிறது.
இதற்காக துபாய், லண்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் பணிபுரிய சி.பி.ஐ. அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுவர். இந்த மூன்று நாடுகளுடனும் இது தொடர்பான பேச்சுக்கள் முடிந்து, அனுமதி பெறப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்
0 கருத்துரைகள்:
Post a Comment