Tuesday, November 6, 2012

மக்கள் வெள்ளத்தில் திணறிய மதுரை - முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிக்க முயற்சி செய்யும் உளவுத்துறைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு மற்றும் பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் “குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம் நீதிக்கான முழக்கம்” என்ற தலைப்பில் மதுரை மண்டல மாநாடு 4.11.2012 அன்று மாலை 6.45 மணியளவில் முனிச்சாலை ஒபுளாபடித்துறையில் மருத நாயகம் திடலில் வைத்து நடைபெற்றது. 


மாலை 6.45 மணிக்கு ஒற்றுமை கீதத்துடன் மாநாடு துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் மதுரை மாவட்ட தலைவர் இல்யாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது நஸ்ருதீன் தலைமையுரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது நஸ்ருதீன்

முகமது நஸ்ருதீன்

பாப்புலர் ஃப்ரண்ட்மாநில செயலாளர் ஆரிப் பைசல் , அரசு டவுன் காஜியார் காஜா மொய்னுதீன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் நஜிமுதீன் , பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாவட்ட தலைவர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் .


இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய பொது செயலாளர் கே.எம்.ஷரீப் , பாப்புலர் ப்ரண்டின் மாநில பொது செயலாளர் காலித் முஹம்மது , எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி , பா.ம.க மாநில துணைத் தலைவர் கஸ்ஸாலி , நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட்டின் மாநில தலைவர் பாத்திமா ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொது செயலாளர் கே.எம்.ஷரீப்

பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொது செயலாளர்

பாப்புலர் ப்ரண்டின் மாநில பொது செயலாளர் காலித் முஹம்மது

பாப்புலர் ஃப்ரண்ட்மாநில பொது செயலாளர்

 எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி

தெஹ்லான் பாகவி

மாநாட்டு தீர்மானங்களை புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் மற்றும் விருதுநகர் மாவட்ட தலைவர் அபூபக்கர் ஆகியோர் வாசித்தனர். மாநாட்டின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட்டின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் காலித் நன்றியுரையாற்றினார். இம்மாநாட்டில் ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் உள்பட பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

 மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம்


மாநாடு குறித்து பத்திரிகையில் வந்த செய்தி 

dinakaran about popular front of indiadinathanthi  about popular front of indiathe hindu about popular front of indiaindian express about popular front of india

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza