Sunday, November 4, 2012

காலாவதியான மருந்துகளை எப்படிக் கண்டுபிடிப்பது?


காலாவதியான மருந்துகளை எடுத்துக் கொள்வதால் என்னாகும்?

‘‘முதல் விஷயம் அதோட ஆற்றல் குறைஞ்சிருக்கும். உடம்புக்கு முடியலைன்னு டாக்டர்கிட்ட போயிருப்பீங்க. மலேரியாவா இருக்கலாம்னு டாக்டர் அதுக்கான மருந்துகளைக் கொடுத்திருப்பார். ஆனா, நீங்க எடுத்துக்கிட்ட மலேரியா மருந்து காலாவதி ஆனதா இருந்தா, அது வேலை செய்யாது. மலேரியா குணமாகாது. மறுபடி டாக்டர்கிட்ட போவீங்க. ‘நீங்க கொடுத்த மருந்து கேட்கலை’ம்பீங்க. 

காலாவதி மருந்து எடுத்துக்கிட்ட விஷயம் டாக்டருக்கு தெரியாது. அவர் மண்டையை உடைச்சுக்கிட்டு, ஒருவேளை அது டைஃபாய்டா இருக்குமோன்னு வேற மருந்துகளையும் டெஸ்ட்டுகளையும் எழுதிக் கொடுப்பார். உங்க நேரம், பணம்னு எல்லாம் விரயமாகும். காலாவதியான மருந்துகளை எடுத்துக்கிறதால சிலருக்கு சரும அலர்ஜி வரலாம். அரிதா சிலருக்கு கல்லீரல், சிறுநீரகம் மாதிரி உள் உறுப்புகள் பாதிக்கப்படலாம். 

எக்ஸ்பைரி ஆனது தெரியாம, ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கிட்டா, பெரிய பாதிப்புகள் வந்துடாது. அப்படி எடுத்துக்கிட்டது தெரிஞ்சா, உடனே டாக்டர்கிட்ட அதைச் சொல்லி, அட்வைஸ் கேட்கறது பாதுகாப்பானது’’ என்கிறார் பொது மருத்துவர் அருணாச்சலம். மளிகைச் சாமான்கள், அழகு சாதனங்கள், பாக்கெட் உணவுகள், காய்கறிகள், பழங்கள், இத்யாதி இத்யாதிகளுக்கும் காலாவதி காலம் உண்டு. 

எப்படிக் கண்டுபிடிப்பது?

நீங்கள் வாங்கும் மாத்திரை மற்றும் மருந்து பாட்டில்களின் மேல் அதன் காலாவதி தேதி இவற்றில் ஏதேனும் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

expiry 
expiry date 
expires 
exp 
exp date 
use by 
use before 

சில மருந்துகளுக்குக் குறுகிய கால காலாவதி கெடு குறிப்பிடப்பட்டிருக்கும். குழந்தைகளுக்குத் தண்ணீரில் கரைத்துக் கொடுக்கக் கூடிய ஆன்டிபயாடிக் பவுடர்கள், கண்களுக்கான டிராப்ஸ் போன்றவை இந்த ரகம். இவற்றை ஒரு வாரம் முதல் அதிகபட்சம் 1 மாதத்துக்குள் உபயோகிக்கச் சொல்லி, உறையின் மீது குறிப்பிட்டிருப்பதை கவனிக்கலாம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza