சிவசேனா தலைவர் பால் தாக்கரே மறைவு குறித்தும் அவருக்காக பந்த் தேவையில்லை எனவும் ஃபேஸ்புக்கில் விமர்சித்தற்காக 2 கல்லூரி மாணவிகள் மீது சிவசேனா கட்சி வழக்கு தொடர்ந்தது.
இதனை தொடர்ந்து இரண்டு மாணவிகளும் கைது செய்யப் பட்டனர். ஃபேஸ்புக்கில் கருத்து சொன்னதற்காக பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரஸ் கவுன்சில் தலைவர் முன்னாள் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மகாராஷ்டிரா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த 2 பெண்களை கைது செய்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment