Wednesday, November 7, 2012

12 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்திவரும் மனித உரிமை போராளி!


இரும்பு பெண் என்று அழைக்கப்படும், ஐரோம் சானு ஷர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை, ரத்து செய்யக் கோரி, உண்ணாவிரதம் துவங்கி, நேற்றுடன், 12 ஆண்டுகள் ஆயின. மணிப்பூரில், ஆயுதப் படைக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. 2000ம் ஆண்டு, நவம்பர் 2ம் தேதி, இம்பால் விமான நிலையம் அருகே, அசாம் ரைபிள் படையினரால், அப்பாவி பொதுமக்கள், 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இதில், வீர தீர செயலுக்காக, தேசிய விருது பெற்ற சிறுவனும் கொல்லப்பட்டு இருந்தான். இதை கண்டித்தும், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை, ரத்து செய்யக் கோரியும், மணிப்பூரை சேர்ந்த ஐரோம் சானு ஷர்மிளா என்ற பெண், தன், 28 வயதில் , 2000ம் ஆண்டு நவம்பர், 5ம் திகதி, உண்ணாவிரதத்தை துவக்கினார். சமூக ஆர்வலரான இவர், பத்திரிகைகளில் சமூக அவலங்களை கட்டுரையாக எழுதி வந்தார். காந்திய வழியில், போராடிய ஷர்மிளா, ஒரு சொட்டு தண்ணீர் கூட பருகாமல், பட்டினி கிடந்து, உலக கவனத்தை கவர்ந்தார்.
இரும்பு பெண் என்று அழைக்கப்படும், ஐரோம் சானு ஷர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை, ரத்து செய்யக் கோரி, உண்ணாவிரதம் துவங்கி, நேற்றுடன், 12 ஆண்டுகள் ஆயின. மணிப்பூரில், ஆயுதப் படைக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. 2000ம் ஆண்டு, நவம்பர் 2ம் தேதி, இம்பால் விமான நிலையம் அருகே, அசாம் ரைபிள் படையினரால், அப்பாவி பொதுமக்கள், 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில், வீர தீர செயலுக்காக, தேசிய விருது பெற்ற சிறுவனும் கொல்லப்பட்டு இருந்தான். இதை கண்டித்தும், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை, ரத்து செய்யக் கோரியும், மணிப்பூரை சேர்ந்த ஐரோம் சானு ஷர்மிளா என்ற பெண், தன், 28 வயதில் , 2000ம் ஆண்டு நவம்பர், 5ம் திகதி, உண்ணாவிரதத்தை துவக்கினார். சமூக ஆர்வலரான இவர், பத்திரிகைகளில் சமூக அவலங்களை கட்டுரையாக எழுதி வந்தார். காந்திய வழியில், போராடிய ஷர்மிளா, ஒரு சொட்டு தண்ணீர் கூட பருகாமல், பட்டினி கிடந்து, உலக கவனத்தை கவர்ந்தார்.
12 ஆண்டுகளாக  உண்ணாவிரதம் இருக்கும் இரும்பு பெண்..! (படம் இணைப்பு)
இரும்பு பெண்
இதனால், மணிப்பூர் அரசுக்கு சிக்கல் எழுந்தது. இவர், மீது தற்கொலைக்கு முயன்றதாக குற்றச்சாட்டு சுமத்தி, பலவந்தமாக கைது செய்யப்பட்டார். இம்பாலில் உள்ள அரசு மருத்துவமனையில், பலவந்தமாக அனுமதித்து, தொடர்ந்து, 12 ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், 12 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வரும் ஷர்மிளாவுக்கு, இந்தியாவிலுள்ள பல்வேறு மக்கள் உரிமை அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பல்வேறு தலைவர்கள், இவரை நேரில் சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடும் கோரிக்கைவிடுத்தனர். அதை அவர், ஏற்க மறுத்தார். இவரது, மன உறுதியை பாராட்டி, பல சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டது. தனது கோரிக்கையை ஏற்று ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும்வரை, போராட்டத்தை தொடர்வதாக ஷர்மிளா அறிவித்து இருந்தார். இந்நிலையில், நேற்றுடன் அவரது போராட்டம் துவங்கி, 12 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தது.

இதையொட்டி, அமைதி அறக்கட்டளை உட்பட, பல்வேறு அமைப்புகள் சேர்ந்து, நேற்று, இம்பாலில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தின. மேலும், பொதுமக்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடந்ததாக, ஷர்மிளாவின் சகோதரரும், செய்தி தொடர்பாளருமான சிங்காஜித் தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இம்பால் முழுவதும், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு இருந்தது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza