இஸ்ரேலின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. காசாவுக்கு சென்று கொண்டிருந்த படகை இஸ்ரேல் படையினர் தடுத்து நிறுத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் அடாவடிதனத்தால் பலஸ்தீனில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் நித்தம் நித்தம் கொன்று குவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கு மருந்துகள், உதவிகள் செய்ய எந்த நாட்டிற்கும் அனுமதி வழங்காமல் அட்டூழியத்தை தொடர்ந்து அரங்கேற்றிவருகிறது.
காசா நிலப்பரப்புக்குள் படகுகள் நுழையாதபடி இஸ்ரேல் இராணுவம் தடைகளை போட்டு வைத்துள்ளது. மேலும் யாரும் உள்ளே வரக்கூடாது போன்ற பல்வேறு தடைகளையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தடைகளை மீறி காசா பகுதிக்குள் படகு பயணிக்க முற்பட்ட போது, இஸ்ரேல் படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இத்தகவலை அந்நாட்டின் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த படகு தற்போது இஸ்ரேலின் அஷ்டோட் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரிலிருந்து பின்லாந்து நாட்டுக் கொடியுடன் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி புறப்பட்ட எஸ்த்தல் என்ற இந்தப் படகில் 8 நாடுகளைச் சேர்ந்த 20 பேர் இருந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளின் அரசியல்வாதிகள் ஐந்து பேரும் இந்தப் படகில் சென்றவர்களில் அடங்குவர்.
காசா நிலப்பரப்புக்குள் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கு மருந்துப் பொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்களை எடுத்துக் கொண்டு இந்தப் படகு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment