Monday, October 1, 2012

மின் தடையால் ஏற்பட்ட வித்தியாசமான பிரச்சனை!


தமிழகத்தில் தொடரும் மின் தடையால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பட்ட மக்களும் பல்வேறு
இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எப்பொழுது மின்சாரம் வரும் ? எப்பொழுது போகும்? என்பது தெரியாமல் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் சரிவர செய்ய இயலாமல் பெண்களும் மிகவும் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த வகையில் விருது நகரை சேர்ந்த பெண் ஒருவர் மின் வெட்டால் சந்தித்த சற்று வித்தியாசமான பிரச்சனை இது.


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் "பங்க்' ல், நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, வாடிக்கையாளர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். "எப்போது போகும், எப்ப வரும்' என, யாரும் அறியாதமின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரம்.அப்போது, மனைவியுடன் இரு
நபர்கள், "பைக்கில்' வந்தனர்;இருவருமே அணிந்திருந்தது, ஒரேமாதிரியான ஹெல்மெட். வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிய பின், அதில் ஒரு ஜோடி புறப்பட்டுச் சென்றது.
சாத்தூர் ரோட்டில் நீண்ட தூரம் சென்ற பின், பின்னால் இருந்த பெண்,

""என்ன மாமா! நாம் தாதம்பட்டிபோகணும்; நீங்க சாத்தூர் ரோட்ல போறீங்க,'' என்றார். வாகனத்தை
ஓட்டிய நபருக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனடியாக நிறுத்தி,திரும்பிப் பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி.பின்னால் இருந்தது அவர் மனைவி இல்லை. இருட்டில், அந்தப் பெண்,"கணவர்' என, நினைத்து, தன்னுடன் வந்ததை உணர்ந்தார். மன்னிப்புக் கோரி, மீண்டும் பெட்ரோல் "பங்க்' அழைத்து வந்தார். அங்கு, கணவரைக் காணாமல் மனைவியும்; மனைவியைக் காணாமல் கணவரும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தனர். "மாறி பயணப்பட்டு' திரும்பிய இருவரையும் பார்த்தவுடன், நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்;பிரிந்தவர் கூடினால் பேசவும்வேண்டுமோ!"மின்தடையால் குடும்பத்திலும் குழப்பம் ஏற்படும் போலிருக்கே?' என, புலம்பினர் அங்கிருந்தவர்கள். 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza