துபாய்:இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா – பக்ரீத் பண்டிகை இன்று அரபுலகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்புத் தொழுகையை தொழுதனர்.
காலை 6:00 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.50 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
பல்வேறு நாட்டை சார்ந்த மக்கள் சங்கமித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உற்சாகம் எங்கும் கரை புரண்டோடியது.
0 கருத்துரைகள்:
Post a Comment