கொல்கத்தா:இரோம் ஷர்மிளா இன்று மணிப்பூரின் மகள் மட்டுமல்ல, மாறாக இந்தியாவின், அமைதிக்காக பாடுபடும் அனைத்து நபர்களின் மகள் என்று புகழ்பெற்ற வங்காள எழுத்தாளர் மகா சுவேதா தேவி கூறியுள்ளார். கேரளாவைச் சார்ந்த கோவிலன் அறக்கட்டளை சார்பாக முதன்மை ஆக்டிவிஸ்ட் இந்தியா விருதை மணிப்பூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகளுக்காக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வரும் இரும்பு மனுஷியான இரோம்ஷர்மிளாவிற்கு வழங்கினார் மகா சுவேதா தேவி.
ஷர்மிளாவின் சார்பாக இரோம் ஷிங்ஜித் இவ்விருதை பெற்றுக்கொண்டார். கொல்கத்தா ப்ரஸ் கிளப்பில் வைத்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மணிப்பூரில் நடைபெறும் மனித உரிமைப்போராட்டம் குறித்து இரோம் ஷர்மிளாவுடன் போராடும் சக சமூக ஆர்வலர் பப்லு விவரித்தார். இந்நிலையில் கோவிலன் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட விருதை வாங்க இரோம் ஷர்மிளா மறுத்துவிட்டார். இத்தகவலை அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் AFSPA என்ற கறுப்புச் சட்டத்தை வாபஸ் பெறும் வரை எந்தவொரு அமைப்பு அல்லது தனி நபர்கள் சார்பாக வழங்கப்படும் விருதை வாங்கமாட்டேன் என்று உறுதிபட ஷர்மிளா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரோம் ஷர்மிளா, 2007 ஆம் ஆண்டு Gwangju Prize for Human Rights என்ற விருதையும், 2010 ஆம் ஆண்டு Rabindranath Tagore Peace Prize விருதையும் வாங்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment