உலக மக்கள் தொகைக்கு சமமாக, மொபைல் போன் எண்ணிக்கை உள்ளதாக ஐ.நா.,தொலைதொடர்பு ஏஜன்சி தெரிவிக்கிறது.
ஐ.நா.,தொலை தொடர்பு ஏஜன்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தாவது:கடந்த ஆண்டு வரை, 600 கோடி மொபைல் போன்களுக்காக சந்தா செலுத்தப்பட்டுள்ளது.
அதாவது, 100ல், 86 பேர் மொபைல் போன் சந்தாதாரர்களாக இருந்துள்ளனர்.இதில், சீனாவில் மட்டும், 100 கோடி சந்தாக்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிவில், இந்தியாவும் அந்த எண்ணிக்கையை தொட்டு விடும் என, எதிர்பார்க்கப் படுகிறது.கடந்த ஆண்டு, உலகில் உள்ள, 700 கோடி மக்களில், 230 கோடி பேர், இணையதளத்தை பயன்படுத்தினர்.
ஆனால், பணக்கார நாடுகளுக்கும், வளர்ந்து வரும் நாடுகளுக்கும், நிறைய இடைவெளி இருக்கிறது.இணையதளத்தை பயன்படுத்துபவர்களில், 70 சதவீதம் பேர் தொழில் வளர்ச்சி அடைந்த, பணக்கார நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில், வளர்ந்து வரும் நாடுகளில், இணையதளத்தை பயன்படுத்துவோர், வெறும், 24 சதவீதம் பேர் மட்டுமே.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment