Monday, October 1, 2012

இராமநாதபுரத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துக்களில் இருவர் மரணம்!

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே,  தாமரை ஊரணியை சேர்ந்த மகேஷ்வரன், 23. இவர், அழன்குளத்தை சேர்ந்த தனது நண்பர் ராம்குமாருடன், நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு "ஸ்டார் சிட்டி' பைக்கில் ராமநாதபுரத்திற்கு வந்து விட்டு ஊர் திரும்பினார்( ஹெல்மெட் அணியவில்லை).

நாகாச்சி அருகே, சிறுநீர் கழிப்பதற்காக ரோட்டை விட்டு கீழே இறங்கிய மகேந்திரன் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். உச்சிப்புளி போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதே போன்று கீழக்கரை அருகே ஏர்வாடி காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 24.ஏர்வாடி ஆரம்பசுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணி புரிகிறார். பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். பனையடி ஊரணி அரு÷க,எதிரே வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியதில்,சம்பவ இடத்தில் இறந்தார். இது குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநர்  வீரலிங்கத்தை கைது  செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza