Thursday, September 27, 2012

தமீம் அன்சாரி கைது - தவறாகப் பிரயோகிக்கப்பட்ட சட்டம் ?


ஆங்கிலேயே ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களை ஒடுக்கும் நோக்கில் இராணுவ  ரகசிய சட்டம் (Official Secrets Act 1923) ஐ இயற்றியது. இதன்படி, ஆங்கிலேய அரசின் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதும்,  அதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஆங்கிலேயரிடம்  இருந்து இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகளாகி விட்டபோதிலும், சுதந்திர இந்திய பாதுகாப்புக்கு ஏற்றதாகக்  கருத்தப்படுவதால் இன்றும் நடைமுறையில் உள்ளது.

ரகசிய சட்டம் (Official Secrets Act - 1923) என்ன சொல்கிறதென்றால், "இந்தியாவின் எதிரி நாட்டுக்கு உதவும் வகையில்,  பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அணுகுவது, ஆய்வு செய்வது, அப்பகுதி வழியாக ஊடுறுவுதல் ஆகியவையும் அவை  தொடர்பான வரைபடம், மாதிரிகள் மற்றும் ரகசிய குறியீடுகளை எதிரிநாட்டு உளவாளிகளுடன் பகிர்ந்து கொள்வது  ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.இந்தியாவின் இறையான்மைக்கும் தேசிய ஒருமைப்பாடுக்கும்,உள்நாட்டு  பாதுகாப்புக்கு அல்லது அண்டை நாடுடனான நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த  இந்த சட்டப்பிரிவின்படி தண்டிக்க முடியும்.


இந்த சட்டப்பிரிவின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 14 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  தேசநலனுக்கு கேடுவிளைவிக்கும் நோக்கத்துடனோ அல்லது நோக்கமில்லாமலோ மேற்படி ரகசிய இடங்களில்  பிரவேசிப்பதும் ரகசிய சட்டம் 1923 இன் கீழ் தண்டனைக்குரிய செயலாகும்.
மேலும்,இவ்வழக்கு குறித்த நீதிமன்ற விசாரணைகளின்போது பாதுகாக்கப்பட வேண்டிய ரகசிய தகவல்கள் கசியும்  வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் கருதினால் வழக்கில் தொடர்புடைய பொதுவானவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகாது  இருக்கவும் அறிவுறுத்தப்படலாம்.

 மேலும், செய்தி ஊடகங்கள்,பத்திரிக்கையாளர்கள் வழக்கு விபரத்தை செய்தியாக  வெளியிடுவதும் தடுக்கப்பட்டுள்ளதாகும். (Uninterested members of the public may be excluded from court proceedings if the prosecutions feels  that any information which is going to be passed on during the proceedings is sensitive. This also includes media; so the journalists will not be allowed to cover  that particular case.)

இந்தச் சட்டப்பிரிவில் சிலநாட்களுக்குமுன் கைதான அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி விசயத்தில் மேற்கண்டவை  அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. அவர் கைதான அன்றே தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பத்திரிக்கைகளும்  பரபரப்புச் செய்தியாக இதை வெளியிட்டன. தாங்களே நேரடியாக இருந்து துப்பறிந்தவர்களைப்போல் கற்பனைக்கு  ஏற்ப அச்சுப்பிசகாமல் ஒரே செய்தியையே வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

மேலும், அரசாங்க ரகசிய ஆவணங்களைக் கையாள்பவர்கள், அவற்றை அனுமதிக்கப்படாத பகுதிகளிலோ அல்லது  வெளியிலோ வைத்திருப்போர் மட்டுமே இந்த சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவர் என்பது கவனிக்கப்பட வேண்டிய  ஒன்றாகும். (The Act only empowers persons in positions of authority to handle official secrets, and others who handle it in prohibited areas or outside them  are liable for punishment) கைதாகியுள்ள தமீம் அன்சாரி இந்த ஆவணங்களை கையாள்பரல்லர் என்பதோடு செல்போனில்  படமெடுத்த இடங்கள் சுற்றாலா செல்பவர்களால் எளிதில் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டவையே என்பதும்  குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி ஊழல்,சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு ஆகியவை காரணமாக மத்திய அரசும், கூடங்குளம் அணு  மின்நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம், முஹம்மது நபியை இழிவுபடுத்திய படத்தை வெளியிட்டதற்காக  சென்னை அமெரிக்க துணைதூதரகம் முற்றுகை, மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மாநில  அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பவே பரனில் தூங்கிக்கொண்டிருந்த  ரகசிய சட்டம் 1923 தூசு தட்டப்பட்டு தீவிரவாத பூச்சாண்டி காட்டப்பட்டுள்ளது.

- அழகு சுந்தரம் B.A.B.L.,-

thanks to: www.inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza