Tuesday, September 11, 2012

மரணத் தண்டனை: ஈராக் துணை அதிபர் நிராகரிப்பு!


Fugitive Iraq VP rejects death sentence
அங்காரா:தனக்கு எதிராக பாக்தாத் குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ள மரணத் தண்டனையை நிராகரிப்பதாக ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷிமி கூறியுள்ளார். இத்தீர்ப்பு அரசியல் தூண்டுதல் என்று துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அல் ஹாஷிமி தெரிவித்தார்.

ராணுவத்தினரையும், ஷியாக்களையும் கொலைச் செய்ய தற்கொலைப் படைகளை ஏவினார் என்பது தாரிக் அல் ஹாஷிமி மீதான குற்றச்சாட்டு. இவ்வழக்கு தொடர்பாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹாஷிமி துருக்கிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாக்தான் குற்றவியல் நீதிமன்றம் அல் ஹாஷிமிக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தாரிக் அல் ஹாஷிமி ஆஜராகமலேயே நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது. ஹாஷிமி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடத்திய சோதனைகளில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 1 0 0 1

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza