Saturday, September 22, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறு: ஒன்பது பத்திரிகைகளுக்கு ப்ரஸ் கவுன்சில் நோட்டீஸ்!

press council of india
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தைக் குறித்து அவதூறான செய்தியை வெளியிட்ட ஒன்பது பத்திரிகைகளுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீஃப் அளித்த புகாரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது களங்கத்தை ஏற்படுத்தும் தவறான எண்ணத்துடன் அவதூறானச் செய்திகளை வெளியிட்ட 11 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சானல்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஊடக கட்டுப்பாட்டு குழுவான ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிற்கு கே.எம்.ஷெரீஃப் புகாரை அளித்தார். முன்னர் இந்த பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி சானல்களுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், முறையாக அவை பதிலளிக்கவில்லை.

பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சானல்கள் மீதான 11 புகார்களில் 9 புகார்களை ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஏற்றுக்கொண்டது.
தைனிக் ஜாக்ரன்(ஹிந்தி, உ.பி-மீரட்), ஹிந்துஸ்தான் டைம்ஸ்(ஆங்கிலம், உ.பி), தி ஏசியன் ஏஜ்(ஆங்கிலம், டெல்லி), டெக்கான் க்ரோனிகிள் (ஆங்கிலம், எர்ணாகுளம்-கேரளா), நவபாரத் டைம்ஸ்(ஹிந்தி, டெல்லி), தி இன்குலாப் (உருது, டெல்லி), தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்(ஆங்கிலம், கோழிக்கோடு-கேரளா), தி ஸண்டே கார்டியன்(ஆங்கில வார இதழ்-டெல்லி)ஆகிய பத்திரிகைகளுக்கு விளக்கம் கேட்டு ப்ரஸ்கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விளக்கம் கிடைத்த பிறகு தொடர் நடவடிக்கைகளை ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா மேற்கொள்ளும்.
டைம்ஸ் நவ், ஐ.பி.என் 7 ஆகியவற்றிற்கு எதிரான புகார்களில் – மின்னணு ஊடகங்கள்(தொலைக்காட்சி சானல்கள் மற்றும் இணையதளங்கள்) ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் வரம்பிற்குள் வராது என்று கூறி அதனை கவுன்சில் ஏற்கவில்லை. த பயனீர் மற்றும் ஸண்டே பயனீர் ஆகியவற்றிற்கு எதிரான புகாரை ப்ரஸ் கவுன்சில் பரிசீலித்து வருகிறது.
அதேவேளையில் சானல்களுக்கு எதிரான இதர சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவுச் செய்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்டிற்காக வழக்கறிஞர் பஹர் யு பர்க்கி, மஹ்ரூஃப் அஹ்மத், எ.முஹம்மது யூசுஃப் ஆகியோர் ப்ரஸ் கவுன்சில் முன்பாக ஆஜரானார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza