புதுடெல்லி:டீசல் விலையை உயர்த்தி, சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை வெட்டிக்குறைத்து மத்திய அரசு மக்களுக்கு சவால் விடுக்கிறது என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எரிபொருட்களின் விலை உயர்வு, ஏற்கனவே விலை வாசி உயர்வால் அவதிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. வெகுஜன போராட்டங்களை அடக்கி ஒடுக்கியும் மக்கள் மீது தாங்கமுடியாத சுமையை சுமத்தியும் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடையும். இதனை மத்திய அரசு எதிர்பார்த்து காத்திருக்கட்டும்” என்று இ.அபூபக்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment