டமாஸ்கஸ்:மோதல் உச்சக்கட்டமாக தொடரும் மத்திய சிரியாவின் ஹும்ஸ் நகரத்தில் ராணுவ தாக்குதலில் நேற்று 47 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் ஹும்ஸில் ஒரு வாரத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
மோதலை முடிவுக்கு கொண்டுவர தயார் என பஸ்ஸாருல் ஆஸாத் உறுதி அளித்துள்ளார் என சிரியாவுக்கு சென்ற ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸெர்ஜி லாவ்ரோவ் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் ராணுவம் தாக்குதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
மக்கள் வாழும் பகுதிகளில் ராணுவ டாங்குகள் நுழைந்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் கூறுகின்றன. மரண எண்ணிக்கை 100 -ஐ தாண்டிவிட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே ஒரு தின சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு லாவ்ரோவ் திரும்பினார். சிரியா அரசும், எதிர்ப்பாளர்களும் ஒப்பந்தம் செய்து கொண்டு மோதலை நிறுத்தவேண்டும் என லாவ்ரோவ் அறிவுரை வழங்கினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment