Monday, February 6, 2012

உ.பி:34 எம்.எல்.ஏக்களுக்கு 5 வருடத்தில் வருமானம் 1.67 கோடி அதிகரிப்பு

j2u27
புதுடெல்லி:உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எம்.எல்.ஏக்களாக பதவி வகித்த 34 எம்.எல்.ஏக்களின் வருமானம் 187 சதவீதமாக அதிகரித்துள்ளது.

’குடிமக்களுக்கு சேவை’ புரிந்ததன் மூலம் 1.67 கோடி ரூபாய் வருமானம் அதிகரித்துள்ளது. மீண்டும் தேர்தல் களத்தில் போட்டியிடும் முந்தைய ஆட்சியின் எம்.எல்.ஏக்கள் தேர்தல் கமிஷனுக்கு அளித்த சொத்து விபர பட்டியலில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2007 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 87 லட்சம் ரூபாய் வருமானம் உடைய எம்.எல்.ஏக்களுக்கு இம்முறை தேர்தல் களத்தில் இறங்கும் வேளையில் 2.47 கோடியாக சொத்துக்களும் வளர்ந்துள்ளது.

மிக அதிகமாக சொத்துக்களை குவித்து இருப்பவர் பகுஜன்சமாஜ் கட்சியின் மதுபன் தொகுதி எம்.எல்.ஏவான உமேஷ் பாண்டியக் ஆவார். கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேளையில் பாண்டியக்கிற்கு 5.8 லட்சம் சொத்துக்கள் மட்டுமே இருந்தன. தற்பொழுது சொத்து மதிப்பு 1.13 கோடியாக வளர்ந்துள்ளது. சவுரி சவுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மதுபிரசாத் சம்பத்தின் சொத்து மதிப்பு 6.9 லட்சத்தில் இருந்து 77.62 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆஸம்கர் தொகுதியில் போட்டியிடும் பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளர் ஸர்வேஷ் குமாருக்கு வருமானம் 99.42 லட்சத்தில் இருந்து 9.81 கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது. 8.8 கோடி ரூபாயை கடந்த ஐந்து வருட எம்.எல்.ஏ பதவி காலத்தில் ஸர்வேஷ் குமார் சம்பாதித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza