Wednesday, January 18, 2012

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: சு.சாமியின் வழக்கு தள்ளுபடி

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்
புதுடெல்லி:மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேர்தல் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று(செவ்வாய்க்கிழமை) தள்ளுபடிச் செய்தது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் காகித பிரிண்ட் அவுட் இணைக்கப்பட வேண்டும் அல்லது பழையபடி வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று சுவாமி தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி மற்றும் ராஜீவ் சஹாய் ஆகியோரடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் காகித பிரிண்ட் அவுட் எடுப்பதற்கான வழிவகையைச் செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவது கடினம் என்று நீதிமன்றம் கருதுகிறது.

இருப்பினும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் விரிவான ஆலோசனையை தேர்தல் ஆணையம் நடத்தலாம் என்று குறிப்பிட்டனர்.

இந்த மனுவில் குறிப்பிட்டபடி செயல்படுத்துவதற்கு கொள்கை அளவில் மிகப் பெரும் மாற்றம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கருதுவதால் மனுவை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும் மனுதாரர் தனது மனுவில் இப்போதைய நடைமுறையில் தில்லுமுல்லு நடைபெறுவதாகக் குறிப்பிடவில்லை. அத்துடன் எதிர்காலத்தில் தவறு நிகழ வாய்ப்பிருப்பதாகவும், இதைத் தடுக்க காகித பிரிண்ட் அவுட் முறை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza