Tuesday, January 17, 2012

போர்ப்ஸ் கஞ்ச்:சி.பி.ஐ விசாரணைக்கு எதிர் கட்சி கோரிக்கை

abdul bari siddiqui

பாட்னா:போர்ப்ஸ் கஞ்சில் போலீஸார் நடத்திய அநியாய துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிக் கமிஷனின் காலாவதியை மாநில அரசு நீட்டிக்காத சூழலில் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் அப்துல் பாரி சித்தீக்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிறுபான்மை மக்களிடம் பாரபட்சம் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் போர்ப்ஸ்கஞ்சில் பிஞ்சுக்குழந்தை உள்பட ஐந்து முஸ்லிம்கள் காவிக்கறைப் படிந்த காவல்துறையினரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

போர்ப்ஸ் கஞ்சில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சாலையை மறித்து தொழிற்சாலை சுவர் கட்ட முயற்சித்த வேளையில் அதனை எதிர்த்து போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது இந்த அக்கிரமத்தை பீகார் போலீஸ் கட்டவிழ்த்துவிட்டது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நீதிவிசாரணை நடத்த நீதிபதி மாதவேந்திர சரண் தலைமையிலான கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷனின் காலாவதி டிசம்பர் 23-ஆம் தேதி முடிவடைந்தது. காலாவதி முடிவடைந்த கமிஷன் மேலும் விசாரணை நடத்த சட்டரீதியாக சாத்தியமில்லை என சித்திக்கி கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza