புதுடெல்லி:’சாத்தானின் வசனங்கள்’ என்ற படு மோசமான நாவலை எழுதிய சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை ப்ரஸ் கவுன்சில் சேர்மன் மார்க்கண்டேய கட்ஜு தரம் தாழ்ந்த எழுத்தாளர் என விமர்சித்துள்ளார்.
சல்மான் ருஷ்டி தரம் தாழ்ந்த எழுத்தாளர் என்பதால்தான் சமூகத்தின் பெரும்பாலான மக்கள் ‘சாத்தானிக் வெர்ஸஸ்’ நூலைக் குறித்து அறியாமல் இருக்கின்றார்கள் என கட்ஜு கூறுகிறார்.
ஜெய்ப்பூரில் அண்மையில் நடந்த இலக்கிய திருவிழாவில் ருஷ்டியின் வருகை மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸிங் உரை ஆகியன ரத்துச் செய்யப்பட்டன. இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ள சூழலில் மார்க்கண்டேய கட்ஜுவின் சல்மான் ருஷ்டியைக் குறித்த விமர்சனம் வெளியாகியுள்ளது.
காலனி ஆதிக்க காலத்தின் தாழ்வு மனப்பாண்மையை இன்றும் பேணி வருபவர்கள்தாம் இந்தியாவில் பிரபலமாகியுள்ள சில கல்வியாளர்கள். ஆகையால்தான் அவர்கள் லண்டனிலும், நியூயார்க்கிலும் வசிக்கும்போது பெரிய எழுத்தாளர்களாக மாறிவிடுகின்றார்கள் என ருஷ்டியை குறிப்பிட்டு கட்ஜு கூறினார்.
ருஷ்டிக்கு புக்கர் பரிசை பெற்றுக்கொடுத்த ‘மிட்நைட் சில்ட்ரன்’ நூல் கூட மகத்தான இலக்கியம் என கருதமுடியாது. மதரீதியான எதிர்ப்புக்கு நான் ஆதரவாளர் இல்லை. ஆனால் தரம் தாழ்ந்த(ருஷ்டி) எழுத்தாளரை என்னால் புகழமுடியாது.
உள்நாட்டு இலக்கியங்களை குறித்து இலக்கிய திருவிழாவில் முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். வளமான இந்திய இலக்கியத்திற்கு பதிலாக எல்லோருடைய கவனமும் ருஷ்டியை நோக்கி திரும்பியது.
பனாரஸின் வீதியில் வாழ்ந்ததால் கபீரும், துளசிதாசரும் பிரசித்திப் பெறவில்லை. தேம்ஸ்(லண்டன்) நதியின் கரையில் வாழ்கிறார் என்பதால் ருஷ்டி மகானாக மாறிவிட்டார்.’ இவ்வாறு கட்ஜு கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment