டெல்லி:சமூக வலைதளங்களுக்கு தடைவிதிக்க எதிர்ப்பு தெரிவித்து, அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஹசாரே குழுவிலுள்ள அர்விந்த கவுர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எகிப்து நாட்டில் மக்கள் புரட்சிக்கு பேஸ்புக் சமூக வலைதளம் உதவியதை சுட்டிக்காட்டிய ஹசாரே ஆதரவாளர்கள், இந்தியாவிலும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுவதை தடுக்கவே மத்திய அரசு சமூக வலை தளங்களுக்கு தடை விதிக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட கார்ட்டூன் கலைஞர் அசீம் திரிவேதி, அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து படங்களை வெளியிட்டதால், தனது இணையதளம் முடக்கப்பட்டதாக தெரிவித்தார். அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியை தடுக்கவே தற்போது சமூக வலைதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஹசாரே ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment