பாட்னா:சிறுபான்மையினர் என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்டால் மட்டுமே அவர்கள் அனுபவிக்கும் பல்வேறு பிரச்சனைகளூக்கு தீர்வு காணமுடியும் என மாநிலங்களவை துணைத்தலைவர் கெ.ரஹ்மான்கான் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் பிரதேஷ் கவ்மி தன்ஸீம் சார்பாக நடந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றினார் ரஹ்மான்கான். அப்பொழுது அவர் கூறியது: ‘பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது அரசிடமோ, இதர சமுதாயங்களின் கரங்களிலோ அல்ல என்பதை முஸ்லிம்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். செயல்பாடுகளுக்கு முன்னுரிமைகளை நிச்சயித்து தீர்விற்கு சுயமாக முயற்சிக்க வேண்டும்.
சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான கூட்டு முயற்சி சுதந்திரத்திற்கு பிறகு உருவாகவில்லை என்பது முஸ்லிம்களின் மிகப்பெரிய தோல்வி ஆகும். மதரீதியான பிரிவுகள் மூலமாக முஸ்லிம்கள் பிரிந்து இருக்கின்றார்கள்’ என்று ரஹ்மான் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment