கோவை:கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனைத் தொடர்பாக முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் வெளியிட்டுள்ள கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 12 பேர் கைது செய்யபட்டனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை மக்கள் கைவிடுவதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஒரு மணிநேரத்தில் சுற்றிப் பார்த்துவிட்டு நற்சான்றிதழ் வழங்கினார். இதற்கு அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது.
இந்நிலையில் அப்துல்கலாமின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 12 பேர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாணவன் கலாமின் உருவ பொம்மைக்கு தீ வைத்தார். அதை உடனே போலீசார் அணைத்துவிட்டு அந்த 12 மாணவர்களையும் கைது செய்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment