திக்ரிக்:சதாம் ஹுசைனின் கல்லறைக்கு கூட்டமாக செல்வதற்கு ஈராக்கின் அரசு கடந்த 2 வருடத்திற்கு முன்னர் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தற்போது தனிநபர்கள் சென்று வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் சலாஹுத்தீன் மாகாணத்தில் சதாம் ஹுசைனின் கல்லறைக்கு வருபவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேற்று காலை கல்லறை அமைந்திருக்கும் பகுதியை நிரந்தரமாக மூடவும் அங்கு யாரும் வராமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அம்மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈராக் முன்னால் அதிபர் சதாம் ஹுசைனின் கல்லறைக்கு பள்ளிக் குழந்தைகளும் மற்றும் பொது மக்களும் கூட்டமாக செல்வதாலும் சதாம் ஹுசைனுக்கு மக்களின் ஆதரவு பெருகி வந்ததாலும் ஈராக் அரசு கல்லறைக்கு கூட்டமாக செல்வதை தடுத்துள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டு பொய்யான காரணத்தை ஈராக்கில் அமெரிக்காவின் படையெடுப்பைத் தொடர்ந்து சதாம் ஹுசைனை கொலை குற்றம்சாட்டி தூக்கிலிட்டு கொன்றது. மேலும் சதாம் ஹுசைன், அவருடைய இரு மகன்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் உடல்கள் சலாஹுத்தீன் மாகாணத்தில் பாக்தாத்தில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்ரித் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment