வாஷிங்டன்:இந்தியா-அமெரிக்க சிவிலியன் அணு ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை உறுதிச்செய்யுமாறு அமெரிக்காவின் ஒபாமா அரசு இந்தியாவிற்கு உத்தரவிட்டுள்ளது. ஆயுத கட்டுப்பாட்டிற்கான அமெரிக்க வெளியுறவுத்துறை அண்டர் செக்கரட்டரி எலன் ட்ரோஷர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான ஊடக செய்தியாளர்களிடையே நடந்த சந்திப்பில் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது: ‘அணு சக்தி ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் விஷயத்தில் அமெரிக்க அரசுக்கு எவ்வளவு தூரம் நிர்பந்தம்ஏற்பட்டுள்ளது என்பது இந்தியாவுக்கு நன்றாக தெரியும். இதனைக் குறித்து இந்திய அரசு எங்களிடம் உறுதி அளித்துள்ளது. ஆனால், காரியங்களை பூர்த்திச்செய்ய இந்தியா இதுவரை தயாராகவில்லை. அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான சட்டம் உருவாக்கம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை இந்தியா பூர்த்திச் செய்துள்ளது. இவ்வாறு ட்ரோஷர் கூறினார்.
வெளியுறவுத்துறை துணை செயலாளர் வில்லியம் பேன்சின் இந்தியா சுற்றுப்பயணம் குறித்து உரையாடும் வேளையில் இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கேள்வி எழுந்தது.
கடந்த ஜார்ஜ்புஷ் அரசில் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த ட்ரோஷர், இந்தியா-அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் ஆவார். ஆனால், தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தை பூரணமாக அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment