ஜெய்ப்பூர்:தனது உயிருக்கு ஆபத்து என தகவல் அளித்த ராஜஸ்தான் அரசின் முன்னெச்சரிக்கை கட்டுக்கதை என சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கெடுக்காமல் தடுப்பதே இந்நடவடிக்கையின் நோக்கம் என ட்விட்டரில் எழுதியுள்ள தனது கண்டனக்குறிப்பில் ருஷ்டி கூறியுள்ளார்.
அதேவேளையில் ராஜஸ்தான் அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ருஷ்டி தவறாக புரிந்துக்கொண்டார் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து பயந்துபோன ருஷ்டி ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் பங்கேற்கவில்லை. ஆனால், ருஷ்டியை கொலைச்செய்ய வாடகைக் கொலையாளிகள் தயாராக இருப்பதாக ராஜஸ்தான் மாநில அரசு அளித்த தகவலை மும்பை போலீஸ் நிராகரித்ததை தொடர்ந்து ருஷ்டி ட்விட்டரில் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அதேவேளையில், இத்தகையதொரு இண்டலிஜன்ஸ் ரிப்போர்டை தயாரித்தது யார்? என்பதுக் குறித்து தெரியாது என அவர் கூறினார்.
அசோக் கெலாட் கூறியது:’ஒருவரது உயிருக்கு மிரட்டல் உருவானால் அதற்கு முக்கியத்துவம் அளிப்பது அரசின் கடமையாகும். ருஷ்டியிடம் இந்தியாவுக்கு வருவதற்கோ வராமல் இருப்பதற்கோ கூறவில்லை. ருஷ்டியின் வருகை பிரச்சனையை உருவாக வாய்ப்பிருப்பதாக கூறும் புலனாய்வு பிரிவின் அறிக்கையை இலக்கிய திருவிழா அமைப்பாளர்களுக்கு வழங்க மட்டுமே செய்தோம்’ என்று கெலாட் கூறினார்.
இந்நிலையில் இலக்கிய திருவிழா நிகழ்ச்சியின்போது ருஷ்டியின் சர்ச்சைக்குரிய நாவலை வாசித்த நான்கு எழுத்தாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கிடைத்துள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது. அசோக் குமார் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment