Saturday, November 26, 2011

ஜே டே கொலை:மூத்த பெண் பத்திரிகையாளர் கைது

jede and vora
மும்பை:மிட் டே பத்திரிகையின் ரிப்போர்ட்டர் ஜோதிர்மயி டேயின்(ஜே டே) கொலைத் தொடர்பான வழக்கில் மூத்த பெண் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆங்கில பத்திரிகையான ஏசியன் ஏஜின் டெபுட்டி பீரோ சீஃப் ஜிக்னா வோரா என்பவர்தாம் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஆவார். ஜே டேவை கொலைச்செய்ய நடந்த சதித்திட்டத்தில் ஜிக்னா வோராவுக்கு பங்கிருப்பதாக துணை போலீஸ் கமிஷனர்(க்ரைம்) ஹிமாம்ஷு ராய் கூறியுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக பல தடவை க்ரைம் ப்ராஞ்ச் வோராவிடம் விசாரணை நடத்தியுள்ளது. ஜே டே பயணித்த மோட்டார் சைக்கிளின் நம்பரை நிழலுக தாதா சோட்டா ராஜனுக்கு அளித்தது ஜிக்னா வோரா என கருதுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். ஜே டே கொலை தொடர்பாக சோட்டா ராஜன் கும்பலைச் சார்ந்த 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 11-ஆம் தேதி ஜே டே மும்பையில் வைத்து கொலைச் செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஜே டே சுட்டுக் கொல்லப்பட்டார். சோட்டா ராஜனுக்கு எதிரான செய்திகளை பிரசுரித்ததுதான் கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

குற்றத்தை தூண்டியதற்காக மஹராஷ்ட்ரா ஒருங்கமைவு  குற்றவியல் தடுப்பு சட்டத்தின் படி வோரா மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் இவரை டிசம்பர் முதல் தேதி வரை போலீஸ் காவலில் ரிமாண்ட் செய்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza