பனாஜி:பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுஸைன் தயாரித்த ஆவணப்படத்தை ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் மிரட்டல் காரணமாக சர்வதேச திரைப்பட விழா அமைப்பாளர்கள் வெளியிடுவதை ஒத்திவைத்துள்ளனர்.
சர்வதேச திரைப்பட விழாவின் நினைவு அஞ்சலி பிரிவில் இன்று வெளியிடப்படவிருந்த ஹுஸைன் கதை எழுதி இயக்கி தயாரித்த ‘த்ரூ த அய்ஸ் ஆஃப் த பெயிண்டர்’ என்ற ஆவணப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1967-ஆம் ஆண்டு இந்த ஆவணப்படம் வெளியானது. சட்ட உதவிக் குறித்து ஆலோசித்து வருவதால் இந்த ஆவணப்படத்தை திரையிடுவதை ஒத்திவைத்துள்ளதாக திரைப்பட விழாவின் இயக்குநர் சங்கர் மோகன் தெரிவித்துள்ளார்.
ஹிந்து ஜனஜாக்ரதி சமிதி என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பு இந்த ஆவணத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment