Monday, November 28, 2011

தெருக்களில் வாழும் முஸ்லிம்களுக்கு போலீசாரை கண்டு பயம்: ஸய்யித் ஷஹாபுத்தீன்

vlcsnap-2011-11-28-08h54m09s247

புதுடெல்லி:இந்தியா முழுவதும் உள்ள தெருக்களில் முஸ்லிம்கள் போலீசாரை பயந்து வாழும் சூழல் நிலவுவதாக ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவராவின் தலைவர் ஸய்யித் ஷஹாபுத்தீன் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூகநீதி மாநாட்டில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரைநிகழ்த்தினார் அவர். முஸ்லிம்கள் போலீசாருக்கு பயந்து வாழும் சூழலை முடிவுக்கு கொண்டுவந்தே தீரவேண்டும். அரசியல் கட்சிகள் தேர்தல்களில் வாக்குறுதி அளிப்பதும், பின்னர் அதனை நிறைவேற்றாமலும் இருந்து வருகின்றனர். ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. முஸ்லிம்கள் மீது தீவிரமாக பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது.

சுதந்திரம் கிடைத்து 64 ஆண்டுகள் முடிவடைந்தபோதும் முஸ்லிம்களின் சமூகசூழல் மேம்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza