புதுடெல்லி:தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக் கிழமையன்று மதக் கலவர தடுப்பு மசோதா மீது வருகின்ற குளிர்கால கூட்டுத்தொடரில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
என்.ஏ.சி உறுப்பினர்களாகிய பாரக் நக்வி மற்றும் ஹர்ஷ் மந்தர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்தக் கூட்டத்தில் தெரிவித்ததாவது தற்போதுள்ள அரசு உண்மையிலேயே இந்த சட்டத்தை கொண்டுவருவதில் அக்கறை கொண்டுள்ளது என்றால் அதற்கு சரியான தருணம் இதுவே ஆகும். தற்போது முடிவெடுக்க வேண்டியது அரசுதான் என்று கூறியுள்ளனர்.
இந்த மதக்கலவர தடுப்பு மசோதா கடந்த 2001 ஆம் ஆண்டு என்.ஏ.சி உறுப்பினர்களால் வரையறுக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்பட்டது என்பதும் இதுவரை காங்கிரஸ் அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் பிஜேபி போன்ற எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும் குறுப்பிடதக்கது.
இந்த மசோதா தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு நடத்தப்படும் கலவரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உதவும் மசோதா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா குறித்து என்.எ.சி உறுப்பினர் ஹர்ஷ் கூறியதாவது; தற்போது இருக்கும் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது அதிகாரிகளும் நீதியை மறுத்து வருகின்றனர் எனவே இந்த புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாது முஸ்லிம்கள் குற்றவாளிகளாக இருந்தால் சொற்பமான காரணங்களை வைத்துக்கொண்டே அவர்களை சிறையில் தள்ளிவிட முடியும் அதுவே ஹிந்துக்களாக இருந்தால் அவருக்கு எதிராக வலுவான விசாரணையும் ஆதாரங்களும் மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னால் நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ் அவர்களோ இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற ஏன் இத்தனை தாமதம் ஆகிறது? என்றும் நாங்களும் அன்னா ஹசாரே போல் உண்ணாவிரதம் இருந்து அரசை நிர்பந்தித்தால் தான் இந்த மசோதா மீது விவாதம் மேற்கொள்ளப்படுமா? என்றும் வினவியுள்ளார். தற்போது அமுல் படுத்தியிருக்க வேண்டிய மசோதாவின் மீதும் இன்னும் விவாதம் தொடங்காமல் இருப்பது துரதிஷ்ட வசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment