Tuesday, October 4, 2011

சோமாலியா தலைநகர் மொகாதிஷூவில் பயங்கர குண்டு வெடிப்பு: 139 பேர் மரணம்

golinejad20111004102337937
மொகாதிஷூ:சோமாலியாவின் மொகாதிஷுவில் அமைச்சரவை கட்டிடம் ஒன்றின் வெளிப்புறத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் சுமார் 139 பேர் மரணமடைந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் மாணவர்கள்,இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் மரணம் அடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் அதிகமானோர் தீக்கிரையாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மூன்று அமைச்சரவையின் அமைச்சர்கள் ஒன்று கூடிய சமயத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு அரசாங்க எதிர்ப்பு ஆயுதக்குழு பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவத்தில் தொழிற்துறை அமைச்சரும் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza