புதுடெல்லி:காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் கடந்த ஆம் ஆண்டு அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் காங்கிரஸ் மிருதுவான ஹிந்துத்வா கொள்கையை தழுவுவதாகவும் ஆனால் முஸ்லிம்களிடம் நல்லவர்கள் போல் காட்டிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மன்மோகன் அல்லாது சோனியா காந்தி யாரை பிரதமராக முன்மொழிந்திருந்தாலும் கட்சி அவரை அங்கிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியை பிரதமராக வேண்டும் என்றும் சிங் தற்போது அறிவுறித்தி வரும் நிலையில் விக்கிலீக்ஸ் இக்கம்பி வாட தகவலை வெளியிட்டுள்ளது.
2007-ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அமெரிக்க அதிகாரிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது; காங்கிரஸ் தன்னுடைய மத சார்பற்ற கொள்கையை தழுவ தயங்குவதாகவும் இதனால் தேர்தலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் ஜாதி மதம் களைவதை விட்டு விலகி இருப்பதால் தேர்தல்களில் பின்னடைவு ஏற்படுவதாகவும் தற்போது ஜாதி மற்றும் மதம் ஆகிய அடையாளங்கள் தேர்தலில் பயன் அளிப்பதில்லை எனவே காங்கிரஸ் தற்போது ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தை கொண்டு பயன்பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் தற்போது மிருதுவான ஹிந்துத்வா கொள்கையை ஏற்றுகொள்வதாகவும் இதனால் பிராந்திய கட்சிகள் காங்கிரசின் ஓட்டு வங்கிகளை தங்களுடையதாக ஆக்கிக்கொள்கின்றன எனவும் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment