Saturday, September 10, 2011

டெல்லி குண்டுவெடிப்பு: குவியும் இமெயில்கள்

Sign-Up-Email
டெல்லி:டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்பு தொடர்பாக மூன்றாவதாக வந்துள்ள இமெயிலில் குஜராத்  மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஹுஜி தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக முதலில் ஒரு இமெயில் அனுப்பப்பட்டது. அந்த இமெயில் காஷ்மீரிலிருந்து வந்ததை அறிந்த அதிகாரிகள் சிலரை விசாரித்து கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று வந்த இரண்டாவது மெயிலில், டெல்லி குண்டுவெடிப்பிற்கு  நாங்கள் பொறுப்பேற்பதாக  இந்தியன் முஜாஹிதீன் தெரிவித்துள்ளது. இந்த இமெயில் கொல்கத்தாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் வருகிற 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வணிக வளாகம் ஒன்றிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தபோவதாகவும் அதில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

வல்லுநர்களை குழப்பக்கூடிய வகையில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ரஷ்யாவிலிருந்து மூன்றாவது மெயில் வந்துசேர்ந்தது. இதுவும் இந்தியன் முஜாஹிதீனின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. அரசிற்கும், சில ஊடகங்களுக்கும் இன்று வந்த இந்த மூன்றாவது இமெயிலில், அடுத்ததாக அகமதாபாத் நகரில் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இமெயில்கள் மற்றும் தடயவியல் பரிசோதனை முடிவுகள்  ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக அமைந்துள்ளது . பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தின் காந்திநகர் பகுதியில் ஒரு தடயவியல் சோதனை கூடமும் மற்றொன்று ஹைதராபாத்திலும் தான் இருக்கிறது. அதேபோல பி.எஸ்.என்.எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவை மையத்தின் முக்கிய அலுவலகமும் பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கர்நாடகத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza