Monday, September 5, 2011

ராஸ்-அல்-கைமாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இந்தியர் தற்கொலை

imagesCAJIZAO3
துபாய்:ஐக்கிய அரபு குடியரசின் ராஸ்-அல்-கைமாவில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் வீட்டுக்குள் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பூட்டிய வீட்டுக்குள் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்ட்ட வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் 44 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஹால் சீலிங்கில் தூக்கில் தொங்கினார். 31 வயதுடைய பெண் படுக்கை அறையில் தூக்கில் தொங்கினார். 8 வயதுடைய சிறுமி மற்றொரு அறையில் முகத்தில் பிளாஸ்டிக் பையை மூடிக் கொண்டு இறந்து கிடந்தார். இவர்களது உடல்களை கைப்பற்றி தடயவியல் சோதனைக்காக அனுப்பி உள்ளோம் என்றார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் இவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், மூவரும் கணவன், மனைவி மற்றும் மகளாக இருக்கக் கூடும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza