Tuesday, September 13, 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும்: SDPI கோரிக்கை

DSC_0287
சென்னை இராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் குரு பூஜையை முன்னிட்டு நடந்த கலவரமும் அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளும் வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது என SDPI மாநில தலைவர் KKSM தெஹ்லான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்; “தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனுக்கு குரு பூஜையில் கலந்து கொள்ள தடைவிதித்ததாலேயே போராட்டங்கள் நடந்து அதனால் கலவரமும் ஏற்பட்டள்ளது.

ஜான் பாண்டியனை உரிய பாதுகாப்புடன் குரு பூஜையில் பங்கேற்க அனுமதித்திருந்தால் போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட கலவரங்களையும் தடுத்திருக்கலாம்.

கலவரங்களை கட்டுப்படுத்த நடந்த முயற்சியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படும் போது காவல் துறையினர் அதற்கான உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி உரிய முறையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிவாரணத் தொகை என ஜெயலலிதா அறிவித்துள்ளதை தலா 10 லட்சமாக உயர்த்தவேண்டும் என SDPI சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” எனவும் அவ்வறிக்கையில் அவர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza