Thursday, August 4, 2011

இஸ்லாமிய ஃபோபியா இத்தாலியையும் தாக்குகிறது: முகத்திரைக்கு தடை

niqabரோம்:இத்தாலியில் முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை காப்பாற்றும் நோக்கில் முகத்திரை அணிவதை தடுக்கும் சட்ட வரைவுக்கு பாராளுமன்ற கமிஷன் அனுமதி அளித்துள்ளது.சட்ட வரைவு அமுலுக்கு வந்தால் முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கப்படும்.

பாதுகாப்பு காரணங்களால் பொது இடத்தில் முகமூடியை அணிவதை தடைச்செய்யும் தற்போதைய சட்டத்திற்கு விளக்கமளித்து பாராளுமன்ற கமிஷன் இச்சட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது.


சட்டத்தை மீறும் முஸ்லிம் பெண்களுக்கு 140 முதல் 400 டாலர் வரையிலான அபராதம் விதிக்க இச்சட்டம் கூறுகிறது. முகத்திரை அணிய தூண்டுவோருக்கு 42 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கவும், ஒரு வருட கடுங்காவல் தண்டனை அளிக்கவும் இச்சட்டம் பரிந்துரைக்கிறது.

இத்தாலியிலும் முகத்திரைக்கு தடை விதிப்பதன் மூலம் முகத்திரையை தடைச்செய்யும் ஐரோப்பிய நாடுகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது பிரான்சும், பெல்ஜியமும் முகத்திரைக்கு தடைவிதித்துள்ள நாடுகளாகும்.

அதேவேளையில், முகத்திரைக்கு தடைவிதிக்கும் சட்டத்திற்கு இஸ்லாமிய சமூகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இச்சட்டம் அநீதிமானதும், தனிநபர் சுதந்திரத்தின் மீதான ஆக்கிரமிப்பாகும் என இத்தாலியின் பிரபல இஸ்லாமிய அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza