வாஷிங்டன்:அமெரிக்காவின் கடனை திருப்பி அடைக்கும் திறன் AAA அதி உயர் கிரெடிட் ரேடிங் தரத்தை AA+ படிநிலைக்கு குறைத்த பிரபல க்ரெடிட் ரேடிங் நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் பூவரின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் விமர்சனம் எழுந்துள்ள வேளையில், தங்களது நடவடிக்கையை நியாயப்படுத்தி ஏஜன்சியின் இந்திய வம்சாவழியைச் சார்ந்த தலைவர் தேவன் சர்மா அறிக்கை வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் கடன் அளவில் உருவான கட்டுப்பாடற்ற அதிகரிப்பும், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் கடனை திருப்பி அடைக்கும் திறன் தொடர்பான AAA தரத்திலிருந்து AA+ படிநிலைக்கு குறைக்க காரணம் என சர்மா தெரிவித்துள்ளார்.
உண்மை நிலவரத்தின் அடிப்படையிலும், வெளிப்படையாகவும் இவ்விவகாரத்தில் தாங்கள் நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், ஏதேனும் ஒரு நிறுவனம் அமெரிக்காவின் தரத்தை குறைத்தால் மட்டும் அமெரிக்காவின் கடனை திருப்பி அடைக்கும் திறன் குறைந்துவிடாது. அமெரிக்கா AAA தரத்திலேயே தொடரும் என தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:
Post a Comment