Thursday, August 4, 2011

முபாரக் குற்றத்தை மறுக்கிறார்

 
mubarak_1963054iகெய்ரோ:மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் மூலம் பதவி விலகிய எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை மறுத்துள்ளார். ஊழல், எதிர்ப்பாளர்களை கொலைச்செய்ய உத்தரவிட்டது ஆகிய வழக்குகளில் முபாரக் கெய்ரோவில் போலீஸ் அகாடமியில் தயாராக்கிய நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்கிறார்.

மருத்துவமனையிலிருந்து அதேநிலையில் முபாரக்கை ஹெலிகாப்டரில் கொண்டுவந்தார்கள். முபாரக்கின் இரு மகன்களும், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் ஆத்லி, ஆறு அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.


நோயால் பாதிக்கப்பட்ட ஹுஸ்னி முபாரக்கை ஷரமு ஷேக்கில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையிலிருந்து விசாரணைக்கு அழைத்துவருவார்களா என்பதுக் குறித்து நிலவிய சந்தேகம் நேற்று முபாரக்கை அழைத்துவந்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. முபாரக்கின் மகன்களான் அஃலா, கமால் ஆகியோரும், குற்றஞ்சாட்டப்பட்ட இதர நபர்களும் விசாரணைக்கு ஆஜராகினர். நீதிமன்றம் தனது நடவடிக்கைகளை முழுமைச் செய்வதற்கு அமைதியாக விசாரணையை கவனிக்குமாறு எகிப்திய மக்களிடம் கோரிக்கை விடுத்தபிறகு நீதிபதி அஹ்மத் ரிஃபாத் விசாரணையை துவக்கினார். ஆனால், வழக்கறிஞர்கள் உள்பட பலர் நெருக்கியதால் நீதிமன்ற அறை அமளிதுமளியானது.

குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிரான குற்றங்களை வாசித்து முடிந்தவுடனேயே முபாரக்கும், அவரது மகன்களும் குற்றங்களை மறுத்தனர். விசாரணையை துவக்குவதற்கு முன்பாக நீதிபதி ஹுஸ்னு முபாரக்கிடம், ‘நீதிமன்ற அறைக்கு வந்ததை அடையாளம் கண்டுகொண்டீர்களா?’ என கேட்டதற்கு ‘ஆம்’ என பதிலளித்தார் முபாரக்.

குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராக 4 ஆயிரம் பக்கங்களில் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது. ஆரம்ப நடவடிக்கைகளுக்கு பிறகு விசாரணை இம்மாதம் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் விரைவாக நடக்கும் என நீதிபதி உறுதியளித்தார். ஹபீப் அல் ஆத்லியை சட்டவிரோதமாக சொத்து குவித்ததற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.

எதிர்ப்பாளர்களை கொல்ல உத்தரவிட்டது மரணத்தண்டனைக்கான குற்றமாகும். அரசு கருவூலத்தை ஊதாரித்தனமாக செலவுச் செய்ததாக அஃலா, கமால் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் எகிப்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சிப்போராட்டத்தில் 850 பேர் கொல்லப்பட்டனர்.

முன்னர் கெய்ரோ கன்வென்சன் செண்டரில் நடத்த தீர்மானித்திருந்த வழக்கின் விசாரணை பாதுகாப்பு காரணங்களால் அதிகாரிகள் போலீஸ் அகாடமிக்கு மாற்றினர். விசாரணை நடவடிக்கைகள் 600 பேர் காணும் விதத்தில் கடுமையான பாதுகாப்பு வலையத்தில் இருக்கும் அகாடமியில் நீதிமன்ற அறை அமைந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza