Sunday, August 14, 2011

’எனது தந்தையை விடுதலைச்செய்யும் நாளே எனக்கு சுதந்திரதினம்’ – த்ருதி பிரசாத் மஹாடோ


மிட்னாப்பூர்:ப்ளஸ் ஒன் மாணவரான த்ருதி பிரசாத் மஹாடோவுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் இல்லை. “இந்தியாவுக்கு சுதந்திரதினமாக இருக்கலாம்.ஆனால் எங்களுக்கு அது இல்லை.ஏன் எங்களை போலீஸ் எவ்வித காரணமுமின்றி வேட்டையாடுகிறது?”- த்ருதி பிரசாத் கேள்வி எழுப்புகிறார்.

மேற்குவங்காள மாநிலம் லால்கரில் ஆதிவாசிகள் தங்கள் உரிமைகளை பெறுவதற்காக அவர்களை போராட களமிறக்கி வழிநடத்தினார் என்ற குற்றத்திற்காக அரசால் சிறையிலடைக்கப்பட்ட சத்ரதார் மஹாடோவின் மகன் தாம் த்ருதி பிரசாத்.


ஆதிவாசிகளை கொடுமைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தந்தையை கைதுச்செய்து சிறையில் அடைத்து 2 வருடங்கள் கழிந்த பிறகும் விடுதலைச் செய்யாததில் த்ருதி பிரசாதிற்கு நிம்மதி இல்லை.

லால்கர் போராட்டத்திற்கு தலைமை ஏற்கும் முன்னர் மம்தா பானர்ஜியின் திரிணா முல்காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார் சத்ரதார் மஹாடோ. தந்தை சிறையில் இருப்பதை குறித்து நண்பர்கள் கிண்டலடிப்பதை தன்னால் தாங்கமுடியவில்லை என வேதனையோடு கூறுகிறார் த்ருதி பிரசாத்.

தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் வீட்டு விவகாரங்களை நடத்த தனது தாய் மிகவும் சிரமப்படுவதாக கூறும் த்ருதிபிரசாத் அவருக்கு உதவியாக இருக்க தகுதியுடையவனாக மாறுவதே எனது லட்சியம் என நம்பிக்கையை கைவிடாமல் கூறுகிறார்.

அநீதியை கண்டால் எதிர்ப்பேன் எனக்கூறும் த்ருதி பிரசாதிற்கு முன்மாதிரிகள் அவரது தந்தையும், சுபாஷ் சந்திரபோசும் ஆவர்.

தனது தந்தை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர் யாருக்காக சிறையிலடைக்கப்பட்டாரோ அந்த பிரிவு மக்களுக்காக பணியாற்ற அனுமதிக்கப்படும் நாள்தான் தனக்கு சுதந்திர தினம் என த்ருதி பிரசாத் கூறுகிறார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza