Wednesday, August 17, 2011

முஸ்லிம் தகவல் உரிமை ஆர்வலர் சுட்டுக்கொலை

shehlaபோபால்:தகவல் உரிமை ஆர்வலரான ஷஹ்லா மசூத் அவரது வீட்டிற்கு முன்பு வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஷஹ்லாவை கொன்ற குற்றவாளிகளை குறித்த தேடுதல் வேட்டை நடந்துவருவதாக போலீஸ் சூப்பிரண்ட் காதியார் தெரிவித்துள்ளார்.


காட்டு உயிரினங்களை பாதுகாப்பது உள்ளிட்ட சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்த ஷஹ்லா மசூத் ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு வன மிருகங்களின் புகலிடங்களில் புலிகள் கொல்லப்படுவது தொடர்பான பிரச்சனைகளை எழுப்பியதிலும் இவர் பங்குவகித்திருந்தார். அவர் கடைசியாக ட்விட்டரில் அளித்த செய்தி அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதம் மற்றும் அவரது கைது குறித்தாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza