பெங்களூர்:சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக லோகாயுக்தா சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக முன்னாள் கர்நாடகா மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜ் அனுமதி வழங்கியுள்ளார்.
லோகாயுக்தா அறிக்கையில் உட்படுத்தியிருக்கும் கண்டுபிடிப்புகள் மற்றும் சிபாரிசுகளை அங்கீகரித்த ஆளுநர் குற்ற விசாரணை நடத்த லோகாயுக்தா போலீஸிற்கு அனுமதி அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.
அறிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக கர்நாடகா லோகாயுக்தா சட்டம் 1994, ஊழல் தடுப்புச்சட்டம் 1988 ஆகியவற்றின்படி அறிக்கையின் கண்டுபிடிப்புகளை ஆய்வுச்செய்த பிறகே ஆளுநர் குற்றவிசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளார் என செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment