நமதூரில் கடந்த மூன்று வருடங்களாக தாசின் அறக்கட்டளை சார்பில் திருக்குர் ஆன் ஓதும் போட்டி நடத்தப்பட்டுவருகிறது. அதே போன்று இந்த வருடமும் குர் ஆன் ஓதும் போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் நமதூர் ஜமாஅத் நிர்வாகிகள், தாசின் அறக்கட்டளையின் புதுவலசை நிர்வாகி ஆகியோர் கலந்து கொண்டு அதற்கான சாத்தியக்கூறுகளை கலந்தாலோசித்தலின் அடிப்படையில் தீர்மானிக்கின்றனர். போட்டியின் துவக்க நிகழ்சியை சற்று விமர்சையாக செய்ய வேண்டும் என அறக்கட்டளை நிர்வாகி வேண்டுகோள் விடுக்க ஜமாஅத் பரிசலிப்பு விழாவை அவ்வாறு செய்து கொள்ளலாம் என கூறியிருக்கிறது. ஆனால் அறக்கட்டளை நிர்வாகியின் ஆலோசனையின் படி துவக்க நிகழ்சிக்கு ஏற்பாடு செய்வதென முடிவு எடுக்கப்படுகிறது. அதற்கான நிகழ்சி நிரல் அழைப்பிதலை ஜமாஅத்தே தயார் செய்து தரவேண்டும் என அறக்கட்டளை நிர்வாகி கூற ஜமாஅத் அதனையும் ஏற்று கொள்கிறது.
இதற்கு காரணம் முன்னர் தாசின் அறக்கட்டளையால் கட்டப்பட்டு நமதூருக்கு வக்பு செய்யப்பட்ட பள்ளிக்கூட திறப்பு விழாவில் சற்று மனவருத்தம் ஏற்பட்டு சிலர் நிகழ்சியில் கலந்து கொள்ளாதே இந்த நிகழ்ச்சி நிரலை ஜமாஅத் தாயார் செய்ய காரணம் என தெரிகிறது. இதனை அறக்கட்டளை நிர்வாகி தானே முன்வந்து கூறி இருப்பது பாரட்டத்தக்கது.
அவ்வாறு தயார் செய்யப்பட்ட பத்திரிக்கையில் ஜமாஅத் தனி நபர் துதி பாடமல் பொதுவாக தாசின் அறக்கட்டளையின் சிறப்பு மிகு குர் ஆன் ஒதும் போட்டியின் துவக்க விழாவிற்கு ஜமாஅத்தார்கள், சங்கத்தார்கள், பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும். துவக்கமாக நமதூரில் தராவீஹ் தொழுகை வைக்கும் ஹாபிழ் கிராஅத் ஒதுவார். நமதூர் இரண்டு இமாம்களும் குர் ஆனின் சிறப்பு குறித்தும் அதன் நன்மைகளை குறித்தும் உரையாற்றுவார்கள் என ஜமாஅத் சார்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த கலந்தாலோசனையின்படி எடுக்கப்பட்ட முடிவை ஒப்புக்கொண்டு சென்ற அறக்கட்டளை நிர்வாகி. அதன் அடிப்படையில் நிகழ்ச்சி நிரல் அமைக்காமல் தனது வழிமுறையின் படி அழைப்பிதழ் அச்சடித்து அதனை வழங்கியிறுக்கிறார். இது பிறகு ஜமாஅத்திற்கு தெறியவர இது சம்மந்தமாக பேச அறக்கட்டளை நிர்வாகி அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் அதற்கு வரவில்லை. அதனால் நமதூரில் நடக்கும் நல்ல பல விஷயங்களுக்கு ஒற்றுமையுடனும், மன மகிழ்ச்சியுடனும் செயல்பட வேண்டும். ஆனால் மீண்டும் இது மன வருத்தத்தையும, கருத்துவேறுபாடையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக ஜமாஅத், நிகழ்ச்சியை ஒரு வாரம் கழித்து நடத்துவதாக மைக்கில் அறிவிப்பு செய்திருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் இந்த நிகழ்ச்சி இரு தரப்பினரின் ஒத்துழைப்புடனும் மீண்டும் நடைபெற வேண்டும் என்பதே நம்மை போன்றவர்களின் எண்ணம். இதில் ஜமாஅத் எடுக்கும் முடிவுகள் நமதூரின் ஒற்றுமைக்கும், நலனுக்கும் உகந்ததாக இருக்கும் என தாசின் அறக்கட்டளை நிர்வாகி அவர்கள் நினைக்க வேண்டும். அதே நேரத்தில் நமதூருக்கு தாசின் அறக்கட்டளை நல்ல பல உதவிகளை செய்து வருகிறது என்பதனை நாம் அறிவோம். மேலும் அதன் நிர்வாகியுடன் நல்ல ஒரு சுமூகமான உறவை ஜமாஅத்தும் வளர்த்து கொள்ள வேண்டும். இதனை ஜமாஅத் நிர்வாகிகள் நினைவில் கொள்வது சிறந்தது.
ஊறு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இதனை நாம் விளங்கி கொள்ள வேண்டும். நமதூரில் நோன்பு காலங்களின் தான் இளைஞர்களிடையிலும் சரி, பெரியவர்களிடமும் சரி பிரிவினை குறைந்து போவதை காணமுடியும். பெரியவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளிகளின் கூடி நோன்பு திறப்பதும். அமல்கள் செய்வதும், இளைஞர்கள் தொழுவதும், ஹிஸ்பு ஓதுவதும் என ஒற்றுமையாக பலரை காண முடியும்.
நாம் விசாரித்தவரை இரு பள்ளிவாசல்களிலும் எந்த கருத்து வேற்பாடும் இல்லாமல் நல்ல முறையில், மன வருத்தமின்றி அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அல்லாஹ் அதனை இறுதிவரை நிலைத்திருக்க செய்ய வேண்டும். ஐந்து பைசா பிரயோஜனம் இல்லாத விசயத்தை பெரிதாக்கி அதில் குளிர்காயாமல். அதனை எவ்வாறு சுமூகமாக தீர்ப்பது. நமக்குள் நல்லுரவை எவ்வாறு வளர்த்து கொள்வது என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகளை களைந்து சகோதரத்துவத்தோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாம் அனைவரும் இந்த புனிதமிக்க மாதத்தில் இருகரம் ஏந்தி, இருவிழி பொழிய இறைஞ்சுவோம்......

0 கருத்துரைகள்:
Post a Comment