Tuesday, August 16, 2011

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு:60 பேர் மரணம்

MIDEAST_IRAQ_VIOLEN_754946f
பாக்தாத்:ஈராக்கில் பல்வேறு நகரங்களில் திங்கள் கிழமை காலையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 60 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கார் குண்டு, சாலையோர குண்டு, தற்கொலைப் படை ஆகியன சில நிமிடங்கள் வித்தியாசத்தில் வெடித்துச் சிதறின. தியாலா மாகாணத்தில் பல்வேறு நகரங்களில் மட்டும் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

பாக்தாதிலிருந்து 160 கி.மீ தொலைவில் தெற்கு பகுதியில் உள்ள குட் நகரத்தில் இரட்டை குண்டுவெடிப்புகளில் அதிகமான ஆள் சேதம் ஏற்பட்டுள்ளது. நஜாஃப் நகரத்தில் போலீஸ் கட்டிடத்தின் முன்பு அமைந்துள்ள செக்போஸ்டில் தற்கொலை படையை சார்ந்தவர் வாகனத்தை மோதினார். தாக்குதலின் பொறுப்பை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza