Wednesday, August 10, 2011

ஜெ.வுக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்-10 நாட்களில் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த உத்தரவு

 
judge_gavelடெல்லி:சமச்சீர் கல்வி திட்டத்தை இன்னும் 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக் வர்மா, பி.எஸ்.சௌகான் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.


மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட இயலாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சமச்சீர் கல்வி தொடர்பாக அனைத்து கோணங்களிலும் எல்லா தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்பே மொத்தம் 25 காரணங்களை ஆராய்ந்து இந்த தீர்ப்பை வழங்குவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை நடப்பு கல்வியாண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட சில குறைகள் இருந்தாலும் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டத்தை தனது பிடிவாத குணத்தால் அமுல்படுத்த காலம் தாழ்த்தி மாணவர்களின் படிப்பை 70 நாட்கள் வீணடித்த ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு பாடம் புகட்டியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza