Friday, July 15, 2011

மும்பை:உளவுத்துறையின் வீழ்ச்சி-எஸ்.பி.,ஆர்.ஜே.டி குற்றச்சாட்டு

5936858378_de4611a1e4
புதுடெல்லி:மும்பை தொடர் குண்டுவெடிப்பு பாதுகாப்பு வீழ்ச்சியின் மூலமாக நடந்துள்ளது என சமாஜ்வாதி கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியும் குற்றம் சாட்டியுள்ளன. புலனாய்வு துறையினருக்கு வீழ்ச்சி ஏற்படவில்லை என ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கையில் இருகட்சிகளும் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளன.

புலனாய்வு துறையினருக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் ப.சிதம்பரம் அத்தகையதொரு அறிக்கையை வெளியிட தேவையில்லை என எஸ்.பி தலைவர் முலாயம்சிங் யாதவ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். மிரட்டல் நிலவியபோதும் அரசு மும்பையில் எச்சரிக்கையை மேற்கொள்ளவில்லை என ஆர்.ஜே.டி தலைவர் லாலுபிரசாத்யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்களை கட்டுப்படுத்துவதையும், சம்பவ இடத்திற்கு டாக் ஸ்குவாடினை கொண்டுவருவதின் மூலம் பிரயோசனமில்லை. வீழ்ச்சி ஏற்படவில்லை எனில் குண்டுவெடிப்பு எவ்வாறு நிகழ்ந்தது? உளவுத்துறையினர் தகவல் அளித்திருந்தால் ஏன் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? என லாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza